இனி சனி பகவான் கண்டு பயம் கொள்ள வேண்டாம்
வாழ்க்கையில் கண்டிப்பாக நாம் இன்பம் துன்பம் அனுபவித்து ஆகவேண்டும்.ஜோதிட சாஸ்திரத்தில் அந்த இன்பம் துன்பம் என்பது கிரங்கங்களை வைத்து முடிவு செய்யப்படுகிறது.மேலும் ஒருவர் எப்பேர்ப்பட்ட பலசாலியாகவோ,பணம் புகழ் படைத்தவராக இருந்தாலும் சனி பகவானின் பிடியில் இருந்து கண்டிப்பாக தப்பிக்க முடியாது.அது தான் விதி.
பொதுவாக சனி பகவான் என்றாலே காலம் காலமாக மனிதர்கள் மத்தியில் ஒரு பயம் உள்ளது.அதாவது ஒருவருக்கு சனி பெயர்ச்சி அல்லது அஷ்டமத்து சனி போன்ற கிரகங்கள் நடக்கும் பொழுது அவர்களுக்கு கட்டாயம் வாழ்க்கையில் ஏதோ மிக பெரிய பாதிப்பு உண்டாகும் என்ற அச்சம் உள்ளது.
ஆனால் அது அவர் அவர் சுய ஜாதகம் பொறுத்தே கணிக்கப்படுகிறது. சனி பகவன் சமநிலையாக வேலை செய்வார்.அவர் ஒருவருக்கு வாழ்க்கையின் உண்மைத்துவம் கற்று கொடுத்து,நம்மை ஒழுங்கு படுத்தும் ஒரு ஆசிரியர் என்றே சொல்லலாம்.
ஆனால் அந்த பாடம் கற்று முடிப்பதற்குள் நாம் ஒரு வழி ஆகிவிடுவோம்.அப்படி சனி பகவானின் பாதிப்பில் இருந்து குறைய ஒரு சிறு எளிய பரிகாரம் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
சனி பகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை.அன்றைய தினத்தில் எள் உருண்டைகளை எறும்பு புற்றுகளுக்கு போட எறும்பு சிறுக சிறுக இதை தூக்கி சென்று சேமிக்கும் போது நமக்கு சிறுக சிறுக புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.
மேலும்,ஏழரை சனி அஷடம அர்த்தாஷ்டம கண்டக சனிதசாபுக்தி காலங்களில் சனிக்கிழமைகளில் தங்கள் வயதுக்கேற்ற எண்ணிக்கைகளில் எள் உருண்டைகளை சனிபகவானுக்கு நைவேத்தியம் செய்து அதை அங்கேயே தானமாக கொடுத்துவிட சனிபகவான் நமக்கு சந்தோஷம் தருவார் என்று நம்பப்படுகிறது.
அடுத்தபடியாக கன்றுடன் கூடிய பசுக்களுக்கு வெல்லம் கலந்த எள் உருண்டைகளை வழங்க வாழ்வில் நிம்மதி பிறக்கும்.
சனியின் பாதிப்பால் மனம் குழப்பம் பதட்டம் போன்ற கஷ்டங்களை அனுபவிக்கவேண்டிய சூழல் இருக்கும்.அப்பொழுது மன தைரியம் இழக்காமல் முறையான வழிபாட்டை மேற்கொள்ள வாழ்க்கை இனிமை ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |