ஏழரை சனியே தாங்க முடியவில்லை- சனி திசை 19 வருடங்கள் என்ன செய்யும்?
நவக்கிரகங்களில் சனி பகவான் நீதிமானாகவும் கர்ம வினைகளை அழிப்பவராகவும் ஒருவருடைய ஆயுளை குறிப்பவராகவும் இருக்கிறார். மேலும் சனி பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் 3,6,10,11 போன்ற இடங்களில் அமைவது மிகச்சிறந்த பலனை கொடுக்கும் அல்லது சனிபகவானுடைய நட்பு கிரகமான சுக்கிரன், புதன், குரு ஆகிய கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் இவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல செல்வாக்கு கிடைக்கும்.
அப்படியாக சனிபகவானுடைய ஏழரை சனி காலம்தான் ஒரு மிகக் கடினமான காலங்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் சனிபகவானுடைய சனி திசை 19 வருடங்கள் நடப்பதால் அவை ஒரு மனிதனுக்கு எந்த மாதிரியான தாக்கத்தையும் என்னபலன்களையும் அந்த 19 வருடமும் சனிபகவான் கொடுக்கிறார் என்பதை பற்றி பார்ப்போம்.
சனிபகவான் ஒரு மனிதனுக்கு எந்த விஷயம் செய்தாலும் அவர்களுக்கு சாதகமான நிலையை தான் அவர் கொடுப்பார். அதாவது துன்பத்தைக் கொடுத்தாலும் பிறகு அவருக்கு இன்பத்தையும் வழங்கக்கூடிய ஒரு நிலையை தான் சனி பகவான் உருவாக்குவார் என்பதால் நாம் சனி பகவானை கண்டு எப்பொழுதும் பயப்பட தேவை இல்லை.
அதோடு நம்முடைய கடமையை செய்து தர்மத்தை கடைப்பிடிப்பவரை சனிபகவான் எப்பொழுதும் எந்த கால சூழ்நிலையிலும் அவர்களுக்கு பெரிய அளவிலான தாக்கத்தை இவர் கொடுப்பதில்லை.
1. சனி திசை சனி புத்தி:
சனி திசையில் முதலில் சனி திசை சனி புத்தி 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும். அப்படியாக ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு அரசு வழியில் அனுகூலமும் பெயர் புகழ் மற்றும் ஆடை ஆபரண சேர்க்கைகள் பகைவர்கள் கூட நட்பாக மாறும் நிலை உருவாகும். ஆனால் சனி பலம் இழந்து இருந்தால் அவர்களுக்கு நஷ்டம் மன உளைச்சல் அவமானம் உடல் உபாதைகள் போன்ற நிலை உருவாகலாம்.
2. சனி திசை புதன் புத்தி:
சனி திசையில் புதன் புத்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும். மேலும் ஜாதகத்தில் புதன் பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமான நிலையில் முடியும். அதேபோல் கல்வி மற்றும் அவர்களுடைய ஞாபக சக்தி கலைதுறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், எழுத்து பணியில் இருப்பவர்களுக்கு நல்ல சிந்தனையும் அவர்களுக்கு இந்த காலகட்டத்தில் உருவாக்கும்.
ஆனால் புதன் பகவான் பலம் இழந்து காணப்பட்டால் அவர்களுக்கு உறவினர்களிடையே பகை, குழந்தைகளிடம் பகை மற்றும் ஞாபக சக்தி குறைவு கல்வியில் அக்கறை செலுத்த முடியாமல் இருக்கும் நிலை உருவாகும்.
3. சனி திசை கேதுபுத்தி:
சனி திசை கேது புத்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும். ஒருவர் ஜாதகத்தில் கேது நின்ற இடம் பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் மனைவி மற்றும் குடும்பத்தினால் அவர்களுக்கு உயர்வு நண்பர்களின் உதவி கிடைக்கும்.
அதோடு ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உண்டாகும். ஆனால் கேது நின்ற இடம் பலம் இழந்து இருந்தால் அவர்களுக்கு சொந்த பந்தங்களுடன் வீண் வாக்குவாதம் குடும்பத்தில் பிரச்சனை எதிர்பாராத விபத்துக்கள் எந்த ஒரு விஷயங்களிலும் ஈடுபாடற்ற நிலை மன நிலையில் ஒரு பாதிப்பு போன்ற நிலை உருவாகலாம்.
4. சனி திசை சுக்கிர புத்தி:
சனி திசையில் சுக்கிரபுத்தி 3வருடம் 2மாதம் நடைபெறும். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் அவர்கள் எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். அதைப்போல் குடும்பத்தில் இனிமையான நிலை குழந்தை பாக்கியம், புதிய வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஆடை ஆபரணங்கள் சேர்க்கும் நிலை உருவாகும். ஆனால் சுக்கிரன் பலன் இழந்து இருந்தால் அவர்களுக்கு அவமானம் உறவினர்களிடையே வீண் பழி வறுமை பயம் குடும்பத்தில் பிரச்சினைகள் போன்ற நிலை உருவாகலாம்.
5. சனி திசை சூரிய புத்தி:
சனி திசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும். ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு அரசாங்க வழியில் மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும். அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு உயர்ந்த பொறுப்புகளோடு பெயரும் புகழும் பெறுவார்கள், தொழில் ரீதியாக அவர்கள் முன்னேற்றமும் தந்தை இடையே அவர்களுக்கு நல்ல அனுகூலமும் கிடைக்கும். ஆனால் சூரியன் பலம் இழந்து அவர்கள் இருந்தால் அவர்களுக்கு தந்தை இடையே மன மோதல்கள் குடும்பத்தில் பிரச்சனை சமுதாயத்தில் அவமானம் போன்ற நிலை உருவாகலாம்.
6. சனி திசையில் சந்திர புத்தி:
சனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும். ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு வெளிநாட்டு வேலைகள் மற்றும் தாய் வழி உறவுகளால் நல்ல அணுகூலம் சொத்துக்களில் இருந்த பிரச்சனை இவை அனைத்தும் விலகும். ஆனால் சந்திரன் பலம் இழந்து இருந்தால் அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏதேனும் விபத்துக்கள் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
7. சனி திசையில் செவ்வாய் புத்தி:
சனி திசையில் செவ்வாய் புக்தி 1வருடம் 1மாதம் 9மாதங்கள் நடைபெறும். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு அரசு வழியில் மிகப்பெரிய பதவி உயர்வும் சமுதாயத்தில் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் மரியாதையும் கிடைக்கும். ஆனால் செவ்வாய்யுடன் சனி சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் உடல் நிலையில் சில பிரச்சினைகள் வரலாம். பகைவர்களால் ஆபத்துக்கள் கூட இவர்கள் சில நேரங்களில் சந்திக்கும் நிலை ஏற்படும்.
8. சனி திசையில் ராகு புத்தி:
சனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு வெளிநாடு சென்று அதிகமான பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
அதோடு தங்க நகை வாங்கும் யோகம் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் இருக்கும். ஆனால் ராகு பலம் இழந்து இருந்தால் அவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல், நோய் போன்ற தாக்கங்கள் உண்டாகலாம். சிலருக்கு பெண்களால் அல்லது ஆண்களால் அவமானம் உண்டாகும்.
9. சனி திசையில் குரு புத்தி:
சனி திசையில் குருபுத்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றிகள் கிடைக்கும். திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதோடு புத்திர பாக்கியம் உண்டாகும். பெரிய மனிதர்களுடைய நட்புகள் கிடைக்கும். ஆனால் குரு பலம் இழந்து இருந்தால் அவர்களுக்கு வீண் சாபம் அவமானங்கள் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் சனி திசை நடக்கிறது என்றால் அவர்களுக்கு மேற்கொண்டு சொன்ன ஒரு சில விஷயங்கள் அவ்வாறே நடக்க வேண்டும் என்பது இல்லை. சனி பகவானுடைய அருளும் அந்த ஜாதகர் செய்த தர்மமும் கர்ம வினைகளுக்கும் ஏற்பத்தான் அவர் இந்த சனி திசை 19 வருட காலமும் அவர்களுக்கு நன்மை தீமை வழங்குகிறார்.
அதோடு இந்த காலங்களில் சனி பகவானுடைய தாக்கம் குறைவதற்கு அவர்கள் மனதில் நல்ல சிந்தனையும், சனிபகவானை மனதார சரணம் அடைந்து உங்களுடைய வாழ்க்கை பயணத்திற்கான பாடத்தை கற்றுக் கொண்டே இருந்தோம் என்றால் சனி பகவானுடைய சனி திசை கட்டாயம் முடியும் பொழுது ஒரு மிகப்பெரிய அளவில் வெற்றியையும் ஒரு நல்ல வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







