ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் - சனியின் பார்வையால் எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?
மார்ச் 21 அன்று, சனி பகவான் உத்தரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். வரும் ஏப்ரல் 17 வரை சனி இதே நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்.

இந்த இடப்பெயர்வு மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய ராசிகளுக்கு தொழில், நிதிநிலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் பல சாதகமான பலனை கொடுக்கும் என கூறப்படுகின்றது.
ஜோதிடத்தின் படி சனியின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது பல ராசிகளின் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால் மூன்று ராசியினருக்கு நன்மை. இவற்றுள், ஒரு ராசியினர் தற்போது சனியின் 'ஏழரைச் சனி' காலத்தை கடந்து வருகின்றனர். மற்ற இரு ராசியினர் சனியின் 'அஷ்டமச் சனி' மற்றும் 'அர்த்தாஷ்டம சனி' ஆதிக்கத்தில் உள்ளனர்.
என 4றப்படுகின்றது. இருந்தாலும் சனியின் பார்வை மாற்றத்தால் இது இந்த மூன்று ராசிகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகின்றது.

மேஷம்
- மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் தற்போது 'ஏழரை சனியின்' முதல் காலகட்டத்தைக் கடந்து வருகின்றனர்.
- இந்த சனியின் நட்சத்திரப்பெயர்ச்சி தற்போது மேஷ ராசியினர் வாழ்க்கையில் இடர்பாடுகளை தவிர்க்க உதவம்.
- வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் நீங்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.
- சொந்த தொழில் தொடங்குபவர்களுக்கு இது அருமையான காலம்.
- பல நல்ல வாய்ப்புக்களை பெறுவீர்கள்.
சிம்மம்
- சனி பகவானின் இரண்டரை ஆண்டுப் பெயர்ச்சி தற்போது சிம்ம ராசியினரைப் பாதித்து வருகிறது.
- இந்த கால கட்டத்தில் சனியின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை தர உதவும்.
- உங்கள் பொருளாதார நிலைமையில் முன்னேற்றமடையும்.
- தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கணிசமான நன்மைகளைப் பெறுவார்கள்.
- செல்வந்தர்களுடன் நீங்கள் நட்பு கொள்வீர்கள்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு தற்போது அர்த்தாஷ்டம சனி தாக்கம் இருந்து வருகிறது.
- சனியின் இந்த இடப்பெயர்ச்சியானது எனவே இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புக்களை தரக்கூடும்.
- மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் உங்களின் உறவு வலுப்பெறும்.
- அத்துடன், உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்தும் உங்களுக்குத் தகுந்த ஆதரவு கிடைக்கும்.
- நீங்கள் நினைத்த காரியம் தடைபட்டால் அது தற்போது நிறைவேறும்.