சனிப்பெயர்ச்சி 2025:மீனத்தில் சனி-ராஜயோகம் பெரும் 3 ராசிகள் யார் தெரியுமா?
நவகிரங்களில் நீதிமானாக விளங்குபவர் சனிபகவான்.அவர் எந்த எவ்வளவு சக்தி நிறைந்த மனிதராக இருந்தாலும் அவர்களின் கர்மவினைகளை அழிக்காமல் விடமாட்டார்.மேலும் சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை காலம் எடுத்து கொள்கிறார்.
அதாவது சனி பகவான் நவகிரங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர்.அபப்டியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் அவருடைய ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். தற்போது நடக்கின்ற 2025 ல் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
அந்த வகையில் மார்ச் 29ல் சனிபகவான் மீன ராசிக்கு செல்கிறார்.சனிபகவானின் இந்த மீன ராசியின் பயணம் பல ராசிகளுக்கு பல விதமான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.அதில் குறிப்பிட்ட ராசிக்கு மிக பெரிய நன்மையை தரப்போகிறார்.அவை எந்த ராசி என்று பார்ப்போம்.
மகரம்:
சனிபகவானின் இந்த மீன ராசியின் இடமாற்றம் மகர ராசிக்கு மிக பெரிய மாற்றத்தை கொடுக்கப்போகிறது.இதனால் இவர்களுக்கு பண வரவில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.வேலையில் உயர் பதவிகள் கிடைக்கும்.திருமண வரன்நல்ல முறையில் அமையும்.காதல் வாழ்க்கை சுமுகமாக அமையும்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.உங்கள் உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
துலாம்:
சனி பகவானின் இந்த மீன ராசியின் இடமாற்றம் ராஜயோகத்தை கொடுக்க போகிறது.இவர்களுடைய மன கவலைகள் முற்றிலுமாக விலகும்.கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.மன வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சனை சரி ஆகும்.தொழிலில் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் படி படியாக குறைந்து லாபம் உண்டாகும்.
ரிஷபம்:
சனி பகவானின் இந்த மீன ராசியின் பயணம் இவர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் அளிக்க போகிறார்கள்.நீங்கள் செய்த முதலீடுகள் உங்கள் அதிக அளவில் லாபத்தை கொடுக்க போகிறார்.எதிரிகளால் ஏற்பட்ட துன்பம் விலகும்.வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும்.திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே நல்ல பந்தம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |