சனி பெயர்ச்சி 2025:சனி பகவான் அருளால் ராஜ வாழ்க்கை யாருக்கு?
சனிபகவான் என்றாலே பயம் தான்.இருந்தாலும் சனி கொடுக்க எவர் தடுப்பார் என்ற பழமொழியும் உண்டு.அப்படியாக சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் ஆவார்.அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுக்கும்.
ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. சனி பகவான் இப்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார்.
சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் சகல யோகங்களும் உண்டாகும்.வருகின்ற புத்தாண்டில் வரும் மார்ச் மாத சனி பெயற்சியில் இவர்களுக்கு பல விதமான திருப்பங்களை கொடுக்க போகிறது.மனதில் உண்டான வலிகள் குறையும்.ஆரோக்கியமும் பொருளாதாரமும் மேம்படும்.செய்யும் வேலை அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி நீங்கள் எதிர்பார்த்த செய்து கொண்டு வரும்.குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.வியாபாரத்தில் உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.உங்களை பற்றி தவறாக புரிந்த நபர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள்.
விருச்சிகம்:
ருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பான பலன்களைத் தரும்.விருச்சிக ராசிக்கு 2025ஆம் ஆண்டு நடக்கும் சனி பெயர்ச்சி அனைத்து செல்வங்களையும் வந்து சேர்க்கும்.தொட்டது எல்லாம் வெற்றி ஆகும்.குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.உங்கள் பேச்சு திறமையால் நினைத்ததை சாதிப்பீர்கள்.
கும்பம்:
2025-ல் மீன ராசியில் சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.நீண்ட நாள் திருமணம் வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.இந்த ஆண்டு இவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
மீனம்:
ன ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சி பல வித நல்ல பலன்களை அளிக்கும். எதிரியாக இருந்தவர்கள் உங்களுக்கு நண்பர்கள் ஆவார்கள்.நீண்ட நாள் பண கஷ்டம் விலகும்.மன குழப்பங்கள் விலகி மனம் தெளிவடையும்.உத்யோகத்தில் உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும்.பிள்ளைகள் வழியில் உங்களுக்கு நல்ல ஆதரவு உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |