சனிப்பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2026: கண்டக சனியில் சிக்கும் கன்னி ராசியினர்!

By Vinoja Mar 08, 2026 05:36 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளானது ராசிபலன் கணிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார். 

சனி நாம் செய்யும் கரும வினைகளுக்கு ஏற்ப அதாவது, பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் பாராது கொடுத்துவிடுவார்.

சனிப்பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2026: கண்டக சனியில் சிக்கும் கன்னி ராசியினர்! | Sani Peyarchi Spicial Palangal For Kanni Rasi

அந்தவகையில், இதுவரையில் கும்ப ராசியில் பயணித்து வந்த சனிபகவான் மார்ச் 06 ஆம் திகதி காலை 8:26 மணிக்கு, கும்பத்திலிருந்து மீனத்திற்கு இடம்பெயர்ந்தார்.

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் கன்னி ராசியினருக்கு இந்த சனியெர்ச்சி எப்படி அமையப்போகின்றது என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கன்னி ராசி சிறப்பு கணிப்பு 

கன்னி ராசியினரின் ஐந்தாம் இடத்துக்கும் ஆறாமிடத்துக்கும் உரியவரான சனிபகவான், இப்போது ஏழாமிடத்தில் இருப்பதால், ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம். அத்துடன் கண்டக ஸ்தானமும் கூட  எனவே இந்த ராசியினர் சற்று குடும்ப விடயத்தில் அனுசரித்து சென்றால் சனி பெயர்ச்சி நன்மை பயக்கும்.

தொழில் விடயத்தில் இந்த ராசியினருக்கு சாதகமான மாற்றங்கள் நிகழும், திருமண வாழ்க்கையில் நீண்ட  நாட்கள் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தம்பதியினருக்கு மத்தியில் நெருக்கம் அதிகரிக்கும்.  

சனிப்பெயர்ச்சி சிறப்பு பலன்கள் 2026: கண்டக சனியில் சிக்கும் கன்னி ராசியினர்! | Sani Peyarchi Spicial Palangal For Kanni Rasi

திருமணத்துக்காக காத்திருப்போருக்கு மனதுக்கு பிடித்தால் போல் வரன் அமையும். வர்த்தகம், வாணிபத்தில் நீண்ட நாள் உழைப்புக்கு இந்த சனிப்பெயர்ச்சியின் பின்னர் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். 

அரசு, அரசியல் துறையிலை் பணிப்புரிபவர்கள் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால், உள்ளதையும் இழக்கும் சூழல் உருவாகும். அதனால் பேச்சில் நிதானம் தேவை. குறிப்பாக பணிப்புரியும் இடத்தில் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டியது அவசியம். 

மாணவர்கள் இந்த காலகட்டத்தில் சேம்பலை விட்டொழித்ததால் கல்வியில் முன்னேற்றம் காண்பது உறுதி. பயணத்தில் கொண்டுசெல்லும் பணம் மற்றும் முக்கிய பத்திரங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். 

தலைவலி, தூக்கமின்மை, கழுத்து, அடிவயிறு தொடர்பான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது. மேல்மலையனூர் அங்காளம்மனை வழிபடுவது கூடுவதல் நன்மைகளை தரும். 



  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US