நாளை(31.08.2024) சனி மகா பிரதோஷம் கட்டாயம் இதை சிவன் கோயிலில் செய்யுங்கள்

By Sakthi Raj Aug 30, 2024 12:30 PM GMT
Report

பிரதோஷம் என்றாலே சிவனுக்கு உரியது.அன்று சிவபெருமானை வழிபட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.அப்படியாக ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாள் 31.8.2024 நாளை சனிக்கிழமையோடு சேர்ந்து பிரதோஷமும் வரவிருக்கின்றது.

அது இன்னும் கூடுதல் விஷேசம் தருகின்றது. அப்படியாக வாழ்க்கையில் விதியின் சூழ்ச்சியால் ஏற்பட்ட கடன் சுமை குறையவும், குடும்பம் சுபிட்சம் பெறுவும், செல்வ வளத்தில் உயரவும், நாளைய தினம் செய்ய வேண்டிய எளிமையான சிவன் வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

பிரதோஷ நேரம் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை. எவ்வளவு வேலை இருந்தாலும் சிவபெருமானுக்காக இந்த நேரத்தில் இருந்து ஒரு 20 நிமிடத்தையாவது ஒதுக்கி கோவிலுக்கு சென்று சிவன் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து "ஓம் நமசிவாய" மந்திரத்தை சொல்லுவது மிக அற்புதமான பலனை கொடுக்கும்.

நாளை(31.08.2024) சனி மகா பிரதோஷம் கட்டாயம் இதை சிவன் கோயிலில் செய்யுங்கள் | Sani Prathosham Siva Peruman August

நந்தி தேவருக்கு ஒரு கட்டு அருகம்புல் வாங்கி கொடுப்பது இன்னும் சிறப்பு.மேலும் சிவபெருமானுக்கு உரிய வில்வ இலை வாங்கி கொடுப்பது நம்முடைய பாவங்களை குறைக்கும்.

இன்னும் விரும்பினால் அபிஷேகத்திற்கு தேவையான பொருள், பழம், தேங்காய் உடைப்பது, எல்லாம் செய்யலாம். பொதுவாக கோயிலுக்கு சென்றால் பெரும்பாலான மக்கள் விளக்கு போடுவதில்லை.

அப்படியாக நாம் கோயிலுக்கு சென்றால் கட்டாயம் விளக்கு போடும் பழக்கம் கொண்டு வரவேண்டும்.இல்லை என்றால் அங்கு இருக்கும் அகண்ட தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றுங்கள். அதுவும் இல்லை என்றால் 1/2 லிட்டர் நல்லெண்ணெய் வாங்கி கோவிலுக்கு தானம் கொடுங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்து உள்ள அற்புதமான திருத்தலங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்து உள்ள அற்புதமான திருத்தலங்கள்


இப்பொழுது தீராத கடன் சுமை உள்ளவர்கள் கடன் சுமையிலிருந்து வெளிவர, நாளைய தினம் சிவபெருமானுக்கு வெண் பொங்கல் நெய்வேதியும் வைக்க வேண்டும்.

வீட்டிலிருந்தே உங்கள் கையால் வெண்பொங்கல் செய்து கொண்டு போய் சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து அர்ச்சனை செய்து, அதை கோவிலுக்கு வெளியில் யாசகம் கேட்பவர்களுக்கு தானம் கொடுப்பது மிக மிக சிறப்பு.

கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கும் இந்த வெண்பொங்கலை நீங்கள் தானமாக கொடுக்கலாம்.சில கோயில்களில் இப்படி செய்வதை அனுமதிக்க மாட்டார்கள்.

அவர்கள் கோயிலுக்கு காசாக கொடுத்து விடலாம்.இப்படி செய்வதனால் மனம் சுமை குறைவதோடு மட்டும் அல்லாமல் வாழ்க்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் விலகும்.சிவனின் அருளும் நமக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US