சனியின் பிடியில் சுக்கிரன் - தலைகீழாக மாறப்போகும் 3 ராசிகளின் விதி!
ஜனவரி 12ஆம் தேதி சனி பகவானின் சொந்த ராசியான மகரத்தில் குடியேற இருக்கிறார். சுக்கிரனின் மகர ராசி பெயர்ச்சி என்பது சில ராசிக்காரர்களுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். திடீர் நிதி இழப்புகள் அல்லது பொருளாதார நெருக்கடிகளை இந்த ராசிகள் சந்திக்க நேரிடலாம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

மேஷம்
முதலீடுகளில் நிதி இழப்புகளை சந்திக்கலாம். கடன் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளக்கூடும். கொடுத்த பணம் திருப்பிக் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் எழக்கூடும். திட்டமிட்ட காரியங்களை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
கடகம்
புதிய முயற்சிகளை தொடங்க திட்டமிடுபவர்கள் தற்காலிகமாக அதை ஒத்தி வைப்பது நல்லது. பணியிடத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. உங்கள் வேலையில் மேலதிகாரிகள் அதிருப்தி அடையக்கூடும் என்பதால் வேலை இழப்புகள் போன்றவற்றையும் சந்திக்கலாம்.
தனுசு
கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையலாம். தேவையில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்ள நேரலாம். கொடுத்த பணம் திருப்பி கிடைப்பதில் தடைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிக அலைச்சல் மனம் மற்றும் உடல் ரீதியான துன்பத்தை ஏற்படுத்தக்கூடும். வயிறு அல்லது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
ஏழை எளிய பெண்களுக்கு உணவுக்கு தேவையான பொருட்கள் அல்லது வஸ்திர தானம் வழங்குவது சுக்கிர பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.