12 ஆண்டுகள் பிறகு உருவாகும் ஹன்ஸ மஹாபுருஷ யோகம்.. யாருக்கு அதிர்ஷ்ட மழை?
2026 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக நிறைய முக்கிய பெயர்ச்சிகள் நடைபெற உள்ளது. அதாவது 2026 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் குரு பகவான் அவருடைய உச்ச ராசியான கடக வீட்டில் பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சி மிகவும் சக்தி வாய்ந்ததாக ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகிற. இதனால் ஹன்ஸ மஹாபுருஷ யோகம் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் குரு தான் ஒருவருக்கு பெயர், புகழ், அந்தஸ்து ஆகிவற்றை வாரி வழங்கக்கூடிய வள்ளல் கிரகமாக இருக்கிறார். அப்படியாக 2026 ஆம் ஆண்டில் உருவாகும் ஹன்ஸ மஹாபுருஷ யோகம் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழையை கொடுக்க காத்திருக்கிறது என்று பார்ப்போம்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு குரு பகவானுடைய இந்த ஹன்ஸ மஹாபுருஷ ராஜயோகமானது அவர்களுக்கு வருமானத்தில் ஒரு நல்ல உயர்ந்த நிலையை பெற்றுக் கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் இவர்களுக்கு நல்ல மதிப்பை இந்த காலகட்டத்தில் ஏற்படுத்தி இவர்களுடைய பேச்சுக்கு குடும்பத்தினர் மதிப்பு அளிக்கக்கூடிய யோகத்தை கொடுக்கப் போகிறார்.
பங்கு சந்தை மற்றும் லாட்டரி வழியாக இவர்களுக்கு திடீர் பணவரவு கிடைப்பதற்கான யோகம் அதிகம் இருக்கிறது. தொழில் செய்பவராக இருந்தால் நிச்சயம் தொழில் ரீதியாக கூட்டாளிகளுடன் ஒரு நல்ல இணக்கமான நிலை ஏற்பட்டு உயர்ந்த நிலைக்கு செல்கிறீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்கு ஹன்ஸ மஹாபுருஷயோகமானது இவர்களுக்கு வாழ்க்கையில் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த அங்கீகாரம் கிடைக்கப்போகிறது. நீண்ட நாள் இவர்கள் மனதில் இருக்கக்கூடிய ஏக்கமானது விலப் போகிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடைய முழு ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள்.
சமுதாயத்தில் நீங்கள் தவிர்க்க முடியாத நபராக வலம் வரக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டத்தை குருபகவான் உங்களுக்கு அமைத்துக் கொடுக்கப் போகிறார். தொழில் செய்பவர்களுக்கு நிச்சயம் நிறைய வாய்ப்புகள் வர காத்திருக்கிறது. அதை பயன்படுத்திக் கொண்டால் உயர்ந்த நிலை அடைந்து விடலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு ஹன்ஸ மஹாபுருஷ யோகமானது இவர்களுக்கு நினைத்ததை எல்லாம் சாதிக்க கூடிய ஆற்றலை கொடுக்கப் போகிறார். திடீர் என்று எதிர்பாராத பண வரவும் சொத்துக்கள் இவர்கள் கைகளுக்கு வந்து அடையப் போகிறது.
வாழ்க்கை துணையுடன் தொலை தூர பயணம் செல்வதற்கான யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு நீண்ட நாட்கள் விற்காத நிலையில் இருக்கின்ற சொத்துக்களும் நல்ல விலைக்கு போகக்கூடிய அற்புதமான வாய்ப்புகள் உருவாக போகிறது. மனரீதியாக ஒரு நல்ல தெளிவை உணரப் போகிறீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |