மிகவும் நேர்மையான எண்ணம் கொண்ட 3 ராசியினர்..யார் தெரியுமா?

By Sakthi Raj Jan 13, 2026 08:52 AM GMT
Report

 ஒரு நல்ல மனிதன் என்ற பெயர் அவருடைய குணத்திலிருந்து தான் வருகிறது. அப்படியாக குணத்தில் மிகச்சிறந்த குணமாக "நேர்மை" விளங்குகிறது. இந்த நேர்மையான குணம் எல்லோரிடத்திலும் நாம் பார்த்து விட முடியாது. ஒரு சிலர் இடத்திற்கு தகுந்தாற்போல் அவர்களை மாற்றிக்கொண்டு பயணம் செய்து விடுவார்கள்.

ஆனால் ஒரு சிலர் எவ்வளவு பெரிய துன்பம் நமக்கு நேர்ந்தாலும் பரவாயில்லை நேர்மையாக இருப்பது மட்டுமே என்னுடைய குறிக்கோள் என்று வாழ்வார்கள். இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பும் முக்கிய தூண்டுதலாக இருக்கிறது. அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்கள் என்று பார்ப்போம்.

மிகவும் நேர்மையான எண்ணம் கொண்ட 3 ராசியினர்..யார் தெரியுமா? | People Born This 3 Zodiac Are Most Honest Person

வாஸ்து: தவறியும் இந்த பொருட்களை திங்கட்கிழமை வாங்கி விடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

வாஸ்து: தவறியும் இந்த பொருட்களை திங்கட்கிழமை வாங்கி விடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

துலாம்:

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். அதேபோல் துலாம் ராசியின் சின்னம் தராசு. இவர்கள் அந்த தராசை போல் சரி எது? தவறு எது? என்று சரியாக எடை போட்டு வாழக்கூடியவர்கள்.

அதேபோல் துலாம் ராசியினர் எவ்வளவு பெரிய இக்கட்டான நிலை வந்தாலும் அவர்கள் தர்மத்தை மீறாத ஒரு நேர்மையை கடைப்பிடிக்கக் கூடியவர்கள். அதைப்போல் இவர்களுக்கு  நெருக்கமானவர்கள் அதர்மம் வழியில் செல்கின்றவர்களாக இருந்தாலும் இந்த நபரிடம் அவர்கள் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் விலகி விடுவார்கள்.

மீனம்:

மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். குரு என்பவர் ஆசிரியர் போன்று நன்மை எது தீமை எது என்று சரியாக ஆராய கூடிய பக்குவத்தை கொடுக்கக் கூடியவர். ஆக மீன ராசியில் பிறந்தவர்கள் மனதிற்குள் எதையும் வைத்துக்கொள்ள முடியாது.

ஒருவர் தவறு செய்கிறார்கள் என்றால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அந்த நபரிடம் நேராக நீங்கள் செய்வது தவறு என்று சொல்லக்கூடிய குணம் கொண்டவர்கள். மேலும், இவர்களின் நேர்மையான குணத்திற்கு சில நேரங்களில் பல எதிரிகள் இவர்களின் வேலை செய்யும் இடத்தில் உருவாகி விடுகிறார்கள்.

2026: நண்பர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய ராசிகள்.. ஏன் தெரியுமா

2026: நண்பர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய ராசிகள்.. ஏன் தெரியுமா

 

மகரம்:

மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். கிரகங்களில் சனிபகவான் தான் நீதிமானாக விளங்கக்கூடிய கிரகமாக இருக்கிறார். ஆக மகர ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தாங்கள் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கும்.

அதே போல் எங்கெல்லாம் நேர்மை தவறிய விஷயங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் இவர்களுடைய குரல் எழும்ப கூடிய நிலையும் நாம் பார்க்கலாம். மகர ராசியினர் எதற்கும் அஞ்சாதவர்கள். எந்த ஒரு எல்லையையும் இவர்கள் பார்ப்பதற்கு தயாராகக் கூடியவர்கள். ஆக இயல்பாகவே இவர்களுடைய ராசி அமைப்பின்படி நேர்மையாக நடக்கக்கூடிய குணம் இவர்களிடத்தில் இருக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US