சனிபகவானால் அதிகம் பாதிக்கப்படும் பொழுது நாம் செய்யவேண்டியவை?
சனிபகவான் என்றாலே அனைவர்க்கும் பயம் உண்டாகும்.அவர் வாழ்க்கையில் வர நிச்சயம் ஏதோ பெரிய பாதிப்புகளை கொடுக்க போகிறார் என்று எல்லோரும் அச்சம் கொள்வோம்.ஆனால் அவ்வாறு பதட்டம் அடையாமல் சனி திசை,சனி பெயர்ச்சி நடக்கும் பொழுது நாம் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம்.
ஒருவர் ஜாதகத்தில் சனிதிசை நடக்க தொடங்கிவிட்டால் அவர்கள் வாரம் வாரம் சனிக்கிழமை சனிபகவானை தரிசனம் செய்து எள் தீபம் ஏற்றுவார்கள்.மேலும்,அவரின் குறைய அவர்கள் வெவ்வேறு பரிகாரங்கள் செய்வார்கள்.
அந்த நேரத்தில் நாம் இந்த ஒரு எளிய பரிகாரம் செய்ய அவரின் தாக்கத்தில் இருந்து நாம் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.இந்த பரிகாரத்திற்கு பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து, சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகரை வணங்க வேண்டும்.பிறகு கையில் உள்ள அரிசி மாவை போட்டுக் கொண்டே விநாயகரை மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
பிச்சரசி மாவிற்கு எறும்புகள் குவிந்து விடும்.அவ்வாறு எறும்புகள் அந்த அரிசி மாவை தூக்கி செல்லும் பொழுது நம்முடைய பாதிப்புகள் குறையும்.நாம் வழிபாடு செய்யும் விநாயகர் வன்னி மரத்திற்கு அடியில் இருந்தால் கூடுதல் விஷேசம்.
மேலும் இந்த பரிகாரத்தை சனிக்கிழமையில் செய்யவேண்டும்.இவ்வாறு பச்சரிசி மாவு எறும்புகளுக்கு சாப்பிட்டால் நாம் 108 பேருக்கு தானம் செய்த பலன் கிடைக்கும்.இவ்வாறு இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்து வர நிச்சயம் சனிபகவானின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
சனி திசை பொறுத்தவரையில் ஒரு ஜாதகத்தில் சனி திசை தொடங்கிவிட்டால் அவர்களுக்கு கூடவே சந்தேக புத்தியும் பிறந்து விடும்.ஆதலால் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.ஏன் நெருங்கியவர்கள் வந்து சொன்னாலும் அவர்கள் நம்பமாட்டார்கள்.
அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்னைகளை உருவாக்கி விடும். இதனால் அஷ்டமத்து சனியின் பாதிப்பு உள்ளவர்கள், தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது.
ஆதலால் அவர்கள் அந்த வேளையில் உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும்.சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும்.மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு செய்ய நிச்சயம் நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |