சனியின் பாதிப்பு குறைய சனிக்கிழமை இவரை வழிபாடு செய்யுங்கள்
பொதுவாக பெருமாள் வழிபாடு என்றாலே சனிக்கிழமை உகந்தது என்று பலரும் சனி கிழமை அன்று விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள்.
வாரத்தில் ஏழு நாட்கள் இருந்தும் ஏன் சனிக்கிழமை மட்டும் ஏன் பெருமாளை வழிபட வேண்டும்.அன்றைய நாளில் என்ன அவ்வளவு விஷேசம் என்பதை பற்றி பார்ப்போம்.
அதாவது புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம்.பொதுவாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை அன்று வேங்கடவனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் எல்லாம் விலகும்.
அதே அதே போல நாம் கேட்ட வரங்கள் அனைத்தையும் தந்து அருள்வார். அதிலும் மேலும் ஏழரை சனியில் பீடிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமையில் விரதம் இருந்தால் சனியின் தொல்லை நிச்சயம் விலகும்.
ஏனெனில் சனி பகவான் கலியுகத்தில் முதல் முதலாக வரும் வழியில்,நாரதர் சனிபகவானிடம் தாம் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம்.
ஆனால் திருமலை பக்கம் சென்று விடாதீர்கள் என்று சனிபகவானை வம்பு செய்ய,சனி பகவானோ என்னை யார் என்னசெய்ய முடியும் என்று திருமலையில் மேல் தன் காலை வைக்க!சனி பகவான் பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார் சனி.
உடனே பெருமாள் சனி பகவானிடம் என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார்.
சனியும் பணிவுடன் உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பபடுத்த மாட்டேன் என்று விலகி கொண்டார். மேலும் சனி பகவான் பெருமாளின் எனக்கு ஒரு வரம் தரவேண்டும் என்றார்.
நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை ஆனதால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும் சுவாமி என்றார். திருவேங்கடவனும் சனிதேவனுக்கு வரத்தை அளித்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்று கொண்டார்.
இப்படித்தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது. சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனி அன்றுதான். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள்.
சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த உகந்த நாள் கருதப்படுகிறது.அன்றைய நாளில் நாம் சனி பகவானின் தாக்கம் குறைய பெருமாளை வழிபட நம்முடைய கஷ்டம் தீர்ந்து நீண்ட ஆயுளுடன் செல்வா செழிப்பாக இருப்போம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |