சொந்த ராசியில் உதயமானார் சனி: எந்த ராசிக்கு நல்லது நடக்கும்?
மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படும் சனி பகவானின் உதயம் மார்ச் 18ம் திகதி அன்று நடந்தது.
அன்றைய தினத்தில் தனது சொந்த ராசியான கும்பத்தில் சனி உதயமானார், இதனால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், ஒரு சிலருக்கு அசுபலனையும் கொடுத்துள்ளார்.
இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள,
மேஷம்- முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள், மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும், கல்வியில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்- தேவையற்ற வாக்குவாதங்களால் சிக்கல்கள் எழலாம், நம்பிக்கை குறைவாக காணப்படும், எனினும் நண்பர்களின் ஆதரவு உண்டு.
மிதுனம்- முழு நம்பிக்கையுடன் புதிய வேலையை தொடங்குவீர்கள், பேச்சில் இனிமை உண்டு எனினும் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பது பலன்களை பெற்றுத்தரும்.
கடகம்- தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதத்தால் பிரச்சனையை சந்திக்க நேரிடும், சுய கட்டுப்பாடு தேவை, மனதை ஒருநிலைப்படுத்தவும்.
சிம்மம்- முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள், மனதில் மகிழ்ச்சி உண்டு, தேர்வில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் அமைதி நிலவும்.
கன்னி- பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம், கடினமாக உழைக்க வேண்டிய சூழல் உண்டாகும், நண்பர்களின் ஆதரவு உண்டு, பெற்றோர் உதவி செய்வார்கள்.
துலாம்- பொறுமையாக செயல்படுங்கள், அதிக ஆர்வத்துடன் இருக்க வேண்டாம், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்- உங்களது மற்றும் குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்டவும், கடினமாக உழைக்க வேண்டும், நம்பிக்கையில் குறைவு உண்டு.
தனுசு- மனம் கலங்காமல் பொறுமையை கையாளவும், பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறலாம்.
மகரம்- புதிய வேலை அமையலாம், வருமானம் உயரும், தொழிலில் முன்னேற்றம் உண்டு.
கும்பம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும், தேவையற்ற கோபத்தை தவிர்க்கவும், தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு.
மீனம்: வீண் செலவுகளால் மன நிம்மதி இருக்காது, நம்பிக்கையை இழக்க வேண்டாம், குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.