30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சனியின் ராஜயோகம்

Report

 நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணம் செல்ல சுமார் இரண்டரை காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது சனி பகவான் மீனராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகிறார்.

சனி பகவான் 12 ராசிகளையும் முழுமையாக சுற்றிவர 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். அப்படியாக இந்த நிகழ்வு ஒரு சிலருக்கு மிகச்சிறந்த அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனையும் உண்டாக்கும்.

மேலும், தற்பொழுது சனி பகவான் மீனத்தில் வக்ர நிவர்த்தி அடையும் பொழுது சில ராசிகளுக்கு விபரீத ராஜயோகம் உருவாக உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

மண்டையப்பம் நெய்வேத்தியம் செய்தால் தீராத நோய்களும் தீருமாம்- எங்கு தெரியுமா?

மண்டையப்பம் நெய்வேத்தியம் செய்தால் தீராத நோய்களும் தீருமாம்- எங்கு தெரியுமா?

மிதுனம்:

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட கசப்புகள் விலகும். முடிவிற்கு வராது என்று எண்ணிய பிரச்சனைகள் நல்ல முடிவைப்பெரும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர். விவாகரத்து வாங்க வேண்டும் என்று கோர்ட்டுக்கு சென்றவர்களுக்கும் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு தொந்தரவு செய்த நபர் இடம் மாறி செல்வார். பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும்

துலாம்:

இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தித்து வந்த துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. நினைத்து பார்க்காத அளவிற்கு நன்மைகள் இவர்களை தேடி வரப்போகிறது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சமுதாயத்தில் உங்களுக்கான நற்பெயர் கிடைக்கும். வேலையில் முன்னேற்றமும் அங்கீகாரமும் தேடி வரும். பணம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

தனுசு:

இவர்களுக்கு வீட்டில் ஏற்பட்ட சங்கடங்கள் ஒரு நல்ல முடிவிற்கு வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். நீண்ட நாட்களாக கடனில் சிக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கிடைக்கப் போகிறது. தங்கம் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உருவாகும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு பொற்காலமாக அமையப் போகிறது. மன உளைச்சல் விலகி மகிழ்ச்சியுண்டாகும். திருமண வரன்கள் நல்ல முறையில் அமையும்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US