சனி வக்ர பெயர்ச்சி 2025: 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
மேஷம்:
இவர்கள் திருவண்ணாமலை சென்று அங்கு ஒரு நாள் இரவு தங்கி மறுநாள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ரிஷபம்:
இவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டு வந்தால் நல்ல பலன் பெறலாம்.
மிதுனம்:
இவர்களை ஆஞ்சிநேயரை விஸ்வரூப தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சிறந்த மாறுதல் பெறுவார்கள்.
கடகம்:
இவர்கள் சங்கடஹரசதுர்த்தி நாளில் விநாயகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம்.
சிம்மம்:
இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் தடைகள் விலக சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபாடு செய்து வரலாம்.
கன்னி:
இவர்களுக்கு தினமும் காகத்திற்கு உணவு அளித்த பிறகே இவர்கள் உணவு உண்ண வேண்டும்.
துலாம்:
இவர்களின் மன கவலைகள் விலகி மன தைரியம் உண்டாக வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யவேண்டும்.
விருச்சிகம்:
இவர்களின் எதிரிகள் தொல்லைகள் விலகும் ஆரோக்கியம் மேம்படவும் சனிக்கிழமைகளில் கருடாழ்வாருக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
தனுசு:
இவர்கள் சனிக்கிழமை ஏதேனும் ஒரு ஆலயம் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவேண்டும்.
மகரம்:
இவர்கள் மறக்காமல் திருவோண நட்சத்திர நாளில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து துளசி மாலை சாற்றி வழிபாடு செய்து வரவேண்டும்.
கும்பம்:
இவர்கள் செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் எல்லாம் விலகும்.
மீனம்:
இவர்கள் கட்டாயம் ஞாயிற்று கிழமைகளில் சரபேஸ்வரர் வழிபாடும், வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மன் வழிபாடு செய்து வந்தால் மன தைரியம் பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |