சனிபகவானுக்கு விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்
சனிக்கிழமையில் சனி பகவானை நினைத்து வழிபட அவர் தாக்கத்தில் இருந்து சற்று குறைந்து நம்மை பாதுகாப்பார் என்பது நம்பிக்கை.
அப்படியாக சனிக்கிழமையில் ஒருவர் விரதம் மேற்கொண்டு அவரை வணங்கி அவரை இன்னு கூடுதல் பலனை அருளிச்செய்கிறார் சனி பகவான்.ஒருவர் சனிக்கிழமையில் சனி பகவானை நினைத்து விரதம் மேற்கொண்டால் என்ன விஷயங்கள் எல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
சனிக்கிழமையன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டில் பூஜை செய்து, காலை மற்றும் மதிய வேளைகளில் எந்த உணவு வகைகளும் உண்ணாமல் பால், பழம், தண்ணீர் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ள வேண்டும்.
மாலையில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு இரவு வேளை மட்டும் ஏதேனும் ஒரு எளிமையான உணவை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
அதோடு சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் கோயிலுக்கு சென்று, சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி, கருப்பு எள் மற்றும் வேகவைத்த சாதம் இவற்றை படைத்து, தீபமேற்றி வழிபட்டு வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம்.
சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஒருவர் சனிக்கிழமையில் சனி பகவானுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
சனி பகவானுக்கு விரதம் இருக்க சகல செல்வமும் கிடைக்கும், சனி தோஷத்தால் ஏற்படும் துன்பத்தின் தாக்கம் குறையும், திருமணத்தடை நீங்கும், தோஷங்கள் மற்றும் கர்ம வினைகள் குறையும், பாவங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஆதலால் சனி பெயர்ச்சி சனி திசை நேரங்களில் மிகவும் துன்பம் என்று வருந்தாமல் சனி பகவானை நினைத்து பிராத்தனை செய்து விரதம் மேற்கொள்ள நாம் அவரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |