குழந்தைகள் ஞாபக மறதியால் அவதியா?பெற்றோர் இதை செய்து பாருங்கள்
மனிதனுக்கு உடலில் உயிர் நல்ல ஆரோக்கியம் தாண்டி நல்ல நினைவாற்றல் மிக முக்கியம்.நல்லதொரு நினைவாற்றல் இருந்தால் மட்டுமே எல்லா காரியத்திலும் ஜெயிக்க முடியம்.அப்படியாக சிலருக்கு ஞாபக மறதி என்பது சாதாரணமாக இருக்கும் ஒன்று.
இதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதே சிறந்து மருந்தாகும்.மேலும் வயது முதிர்வு காரணித்தினால் வரும் ஞாபக மறதியை நாம் மருந்துகளால் சரி செய்ய முடியும் என்றாலும்,குழந்தை பருவத்தில் பிள்ளைகள் படிப்பில் தேர்ச்சி பெற இந்த நினைவாற்றல் மிக அவசியமாக படுகிறது.
அவர்கள் தங்கள் குழந்தைக்கு சிறு வயதில் இருந்தே சில ஸ்லோகம் வழியாக தியானம் வழியாக அதை சரி செய்யலாம்,அந்த வகையில் படிப்பிற்கு சிறந்து விளங்குபவள் சரஸ்வதி.அவளை தினமும் வழிபட படிப்பில் சிறந்து விளங்குவதோடு ஞாபக மறதியால் அவதிப்படும் மாணவ- மாணவிகள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.
வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் மறந்து விடுவதுண்டு. சிலர் இதனால் குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை அமைகின்றது.
‘சரஸ்வதி நமோஸ்துப்யம்,
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரியாமி,
ஸித்தர் பவது மே ஸதா!’
இந்த ஸ்லோகம் தவிர கலைவாணி துதிப்பாடல், சகலகலாவல்லி மாலை போன்றவற்றையும் படிக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |