சனீஸ்வரபகவானை சாந்தப்படுத்தும் சனிக்கிழமை பரிகாரங்கள்
சனிக்கிழமை என்பது வழிபாடுகளில் மிக முக்கியமான நாளாகும்.சனி திசை மற்றும் சனி பெயர்ச்சி நடப்பவர்கள் சனிக்கிழமை அன்று சனி பகவானை வழிபாடு செய்ய சனி பகவானால் ஏற்பாடும் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.
அதாவது சனி பாடம் கற்று கொடுத்து ஒரு விஷயத்தை நமக்கு கொடுப்பார்.சனி பகவானை போல் சிறந்த ஆசிரியர் இல்லை என்று சொல்லலாம்.ஆனால் அவருடைய பாதிப்பு நேரங்களில் மிக கடுமையாக இருக்கும்.அதனால் நிறைய மனஉளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மேலும், மற்ற நவகிரகங்களுக்கும் சனிபகவானுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் சனிபகவான் கடவுள்களையே விட்டுவைக்காதவர் சனிபகவான் நீதி தவறாதவர் என்றாலும் தண்டனையை குறைத்துக் கொடுக்க சில பரிகாரங்கள் உண்டு.அதை பற்றி பார்ப்போம்.
சனி பகவானின் கெடுப்பலன்கள் குறைய சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் பாதை உருவாகும். மேலும்,சனிக்கிழமைகளில் சனி பகவானை நினைத்து விரதம் இருக்கலாம்.
ஒருவேளை உணவருந்தி ஆலயம் சென்று நவக்கிரகங்களையும் சனிபகவானையும் வணங்கி முடிந்தால் தானங்கள் செய்ய தோஷம் இருந்தால் படி படியாக குறையும். மிகவும் சிறப்பு வாய்ந்த பலனாக சனிக்கிழமையில் ஆலயத்துக்கு சென்று சனிபகவானுக்கு எள்எண்ணை தீபம் ஏற்றினால் வாழ்க்கையில் நல்ல திருப்பு முனை உண்டாகும்.
பிறருக்கு உதவி செய்வதால் சனி பகவானின் தாக்கம் குறையும்.அவர் நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை சற்று குறைத்து கொள்ளுவார்.
ஆதலால் சனி திசை நடக்கும் பொழுது அன்னதானம் ஏழைகளுக்கு உதவி செய்வதால் பெரும் பாதிப்புகளில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |