சனி கும்பத்தில் இருக்கப் பிறந்தவர்களை.. அரசனும் ஒரு நாள் வணங்குவார்

By Sakthi Raj Sep 24, 2026 05:58 AM GMT
Report

 ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி பகவான் இருக்கிறார். அவர் அமர்ந்திருக்க கூடிய இடம் தான் ஒருவருக்கு வாழ்க்கையில் அவர்கள் எப்பேர்பட்ட நிலைக்கு செல்ல போகிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடிகிறது. சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்திருக்க அந்த ஜாதகரை அரசனும் ஒரு நாள் வந்து வணங்குவார் என்ற ஒரு அம்சம் இருக்கிறது.

அதாவது இது வெறும் அதிகாரத்தை பற்றிய வார்த்தை மட்டும் அல்ல. கும்பம் என்பது சனிபகவானுடைய சொந்த வீடு ஆகும். அதனால் சனி இங்கு அமர்ந்திருப்பது கடின உழைப்பு, பொறுப்பு, மக்கள் தொடர்பு, சமூக நிலை ஆகியவற்றால் ஒருவரை மெதுவாக உயர்த்தி கூட்டிச் செல்லும்.

சனி கும்பத்தில் இருக்கப் பிறந்தவர்களை.. அரசனும் ஒரு நாள் வணங்குவார் | Saturn In Aquarius Make People Popular And Stable

திருமணத்தின் பொழுது மழை பெய்வது நல்ல சகுனமா?

திருமணத்தின் பொழுது மழை பெய்வது நல்ல சகுனமா?

இவர்கள் பிறருடைய உதவியை மட்டும் நம்பி அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே மாட்டார்கள். தங்களுடைய உழைப்பு அனுபவம், பொறுமை ஆகியவற்றால் ஒரு நிலையை உருவாக்குகிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய மதிப்பு எல்லோருக்கும் தெரிவதில்லை. ஆனால், காலம் செல்ல செல்ல இவர்களுடைய உழைப்பின் வலிமை வெளிப்படும்.

அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் போன்றவர்களுடன் தொடர்பு இவர்களுக்கு எளிதில் உருவாகும். ஒரு காலகட்டங்களில் இவர்களை அணுகி வேலை செய்யக்கூடிய நிலை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே உண்டாகக்கூடிய அமைப்பு உண்டு.

அதனால் அரசனும் ஒரு நாள் இவர்களை வணங்குவார் என்ற சொல் இவர்களுடைய சமூக உயர்வை குறிக்கிறது. கும்பம் என்பது தனி மனிதன் மட்டும் பார்க்கக்கூடியது அல்ல. சமூகத்தையும் மக்களையும் பார்க்கக்கூடிய ராசி. அதனால் இவர்களுடைய வாழ்க்கையைத் தாண்டி பலருக்கும் பயன்படும் வகையில் இவர்கள் செயல்படுவார்கள்.

சனி கும்பத்தில் இருக்கப் பிறந்தவர்களை.. அரசனும் ஒரு நாள் வணங்குவார் | Saturn In Aquarius Make People Popular And Stable

எந்த ராசிகளுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, கண்ட சனி நடக்கிறது தெரியுமா?

எந்த ராசிகளுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, கண்ட சனி நடக்கிறது தெரியுமா?

அதனால் இவர்களுக்கு தனி மரியாதை உருவாகிறது. மேலும், சனி இருக்க கூடிய இடத்தில் பொறுப்பு இல்லாமல் உயர்வு கிடைக்காது. அதனால் பதவி, அதிகாரம், நிர்வாகம் போன்ற வாய்ப்புகள் இருந்தாலும் அதோடு சேர்ந்து வேலை சுமையும் அதிகரிக்கும். மற்றவர்கள் தவிர்க்கக் கூடிய பொறுப்புகளையும் இவர்கள் ஏற்று முடிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

ஆனால், சனி பகவான் உடனடியாக எல்லா விஷயங்களையும் கொடுக்க மாட்டார். கொடுத்ததை நிலையாக வைத்திருக்கக்கூடிய தன்மையோடு கொடுப்பார். ஆதலால், இளமையில் எதிர்பாராத அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தாலும் வயது வளர வளர இவர்களுடைய பெயரும் மதிப்பும் வலுப்படும்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US