கருப்பசாமி வேட்டைக்கு போகும் பொழுது எதிரே யாரும் செல்லக்கூடாது.. ஏன் தெரியுமா?

By Sakthi Raj May 22, 2026 11:49 AM GMT
Report

பொதுவாக, கிராமப்புறங்களில் குலதெய்வம் ஆலயங்கள் நடக்கக்கூடிய கோவில் திருவிழாவில் இரவு 12 மணி மற்றும் பகல் 12 மணிக்கு சுவாமி வேட்டைக்கு செல்வதை நாம் பார்த்திருப்போம். அப்படியாக, சுவாமி வேட்டைக்கு செல்லும் பொழுது எல்லோரும் அமைதியாகவும் சுவாமிக்கு எதிரில் யாரும் செல்லாதவரும் பார்த்துக் கொள்வார்கள்.

காரணம், சுவாமி வேட்டைக்கு செல்லும் பொழுது எதிரே யாராவது வந்து விடக்கூடாதுஎன்றும் அவ்வாறு தெரியாமல் வந்தால் பெரிய தெய்வ குற்றம் என்று சொல்கிறார்கள். அப்படியாக, காவல் தெய்வமாக இருக்க கூடிய கருப்பசுவாமி வேட்டைக்கு செல்லும் பொழுது எதிரே யாராவது சென்றால் என்ன நடக்கும்? ஏன் செல்லக்கூடாது ? என்பதை பற்றி பார்ப்போம்.

கருப்பசாமி வேட்டைக்கு போகும் பொழுது எதிரே யாரும் செல்லக்கூடாது.. ஏன் தெரியுமா? | Secret Behind Karupasamy Vettai Ritruals

இந்த உலகத்தில் பகல் நேரங்களை காட்டிலும் இரவு நேரத்தில்தான் நிறைய தவறுகள் நடக்கிறது. இருள் சூழ்ந்து விட்டால் சில மனிதர்களுடைய மனதிலும் இருள் சூழத் தொடங்க விடுகிறது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் தீய சக்திகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இவையெல்லாம் தடுத்து நிறுத்தவே இரவு நேரங்களில் கருப்பசாமி வேட்டைக்கு செல்வதாக சொல்லப்படுகிறது.

இப்படியாக, கருப்பசாமி இரவு நேரத்தில் வேட்டைக்கு செல்லும் பொழுது அவருடைய கருப்பான உருவத்துடன் மிகவும் ஆக்ரோஷமாக கைகளில் பெரிய அருவாளுடன் அவருடைய வெள்ளை குதிரையில் ஏறி வேகமாக செல்வார் என்று சொல்லுவார்கள்.

வைகாசி விசாகம்: முருகப்பெருமான் நமக்கு சொல்லும் முக்கியமான செய்தி என்ன?

வைகாசி விசாகம்: முருகப்பெருமான் நமக்கு சொல்லும் முக்கியமான செய்தி என்ன?

ஊர் எல்லை வரை செல்லும் கருப்பசாமி அங்கே ஊருக்குள் நுழைய காத்திருக்கும் துஷ்டசக்திகளை உள்ளே நுழைய விடாமல் தடுக்கிறார். இவ்வாறு வேட்டைக்கு செல்லும் கருப்பசாமியின் பார்வை மிகவும் உக்கிரமாக இருக்கும்.

இதை சாதாரண மனிதர்களால் கட்டாயமாக தாங்கிக் கொள்ள முடியாது. பொதுவாகவே, கருப்பசாமியின் கருப்பான ஆவேசமான அந்த உருவத்தை பார்த்தாலே மனிதர்கள் பயந்து விடுவதுண்டு. அந்த கோர பார்வையின் உக்கிரம் தாங்காமல் ஒரு சிலர் இறந்தும் போவதாக சொல்கிறார்கள்.

கருப்பசாமி வேட்டைக்கு போகும் பொழுது எதிரே யாரும் செல்லக்கூடாது.. ஏன் தெரியுமா? | Secret Behind Karupasamy Vettai Ritruals

அந்த வகையில் கருப்பசாமியின் பார்வை தீய சக்திகளை தனது கண்களாலே அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த பார்வை தீயவர்களுக்கு அழிக்கவும், நல்லவர்களுக்கு பாதுகாக்கவும் செய்கிறது. அதனால் தான் இரவு நேரத்தில் கருப்பசாமி வேட்டிக்கு செல்லும் பொழுது எதிரே செல்லக்கூடாது என்று சொல்கிறார்கள்.

இதை கிராமப்புறங்களில் இன்றும் பின்பற்றி வருகிறார்கள். இரவில் பெண்கள் தனியாக வெளியே செல்ல மாட்டார்கள். ஆண்களும் கருப்பசாமி கோவில் பக்கம், ஊர் எல்லை ஆகிய பகுதிகளில் செல்ல மாட்டார்கள். ஊரை தாண்டி செல்லும் பொழுது கருப்பசாமியை வணங்கி விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கருப்பசாமி தன்னை வணங்கக்கூடிய பக்தர்களை தெய்வமாக இருந்ததாக கூடியவராக இருக்கிறார். அதேபோல் இரவு நேரங்களில் பயணம் மேற்கொண்டாலோ, தனியாக சென்றாலோ கருப்பசாமியிடம் என்னுடன் துணைக்கு வரும்படியாக சிலர் பிரார்த்தனை செய்து கொண்டு செல்வதையும் நாம் காண முடிகிறது.

கருப்பசாமி வேட்டைக்கு போகும் பொழுது எதிரே யாரும் செல்லக்கூடாது.. ஏன் தெரியுமா? | Secret Behind Karupasamy Vettai Ritruals

அதேபோல், இரவு நேரங்களில் கருப்பசாமி வேட்டைக்கு செல்லும் பொழுது பெண்கள் எதிரே வந்தால் கருப்பசாமி உடனடியாக முகத்தை திருப்பிக் கொள்வாராம். காரணம் தனியாக வருகின்ற பெண் தனது ஆவேசமான உருவத்தை பார்த்து பயந்து விடக்கூடாது என்பதாலும் அவர் மீது காமத்தின் நிழல் கூட விழக்கூடாது என்பதற்காகவும் அவர் இந்த கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் செயல்படுகிறார்.

அது மட்டும் அல்லாமல் பெண்கள் அனைவரும் அவருடைய தங்கை பேச்சி அம்மனைப் போலும், மீனாட்சி அம்மனைப் போல் நினைத்ததால் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்பதால் பெண்கள் எதிரே வந்தாலும் முகத்தை திருப்பி கொண்டு எப்படி சுவாமி செல்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் இன்றும் ஊர் கோவில்களில் நடைப்பெறக்கூடிய திருவிழாக்களிலும் பின்பற்றப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US