வைகாசி விசாகம்: 12 ராசிகள் முருகப்பெருமானை இப்படி வழிபாடு செய்தால் வெற்றி நிச்சயம்

By Sakthi Raj May 22, 2026 06:33 AM GMT
Report

இந்த 2026 ஆம் ஆண்டு முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் மே 30ஆம் தேதியன்று வர இருக்கிறது. இந்த நாளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் நினைத்த காரியங்களும் கிடைக்கும்.

அப்படியாக, 12 ராசிகளும் வைகாசி விசாக தினத்தன்று முருகப்பெருமானை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம் 

இந்த காலகட்டங்களில் உங்களுடைய கடன் தொல்லை விலக செவ்வரளி பூ, மாதுளம் பழம் படைத்து நெய் தீபம் ஏற்றி கந்தசஷ்டி கவசம் படித்து வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ரிஷபம் 

பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகவும், குடும்பத்தில் ஒற்றுமையை நிலைக்கவும் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

பிறகு மல்லிகை, தயிர் சாதம் ஆகியவற்றை படைத்து வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்து திருப்புகழ் பாராயணம் செய்தால் மாற்றம் உண்டாகும்.

மிதுனம்

மனதில் தெளிவு ஏற்படவும் கல்வியில் சிறந்து விளங்கவும் பச்சை திராட்சை துளசி மாலை படைத்து "ஓம் சரவணபவ" என்கின்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து வழிபாடு செய்யும் போது நல்ல பலன்கள் உண்டு.

வைகாசி விசாகம்: 12 ராசிகள் முருகப்பெருமானை இப்படி வழிபாடு செய்தால் வெற்றி நிச்சயம் | Vaikasi Visagam Remedies For 12 Zodiac To Get Luck

வைகாசி விசாகம்: இந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் வாழ்க்கையே மாறுமாம்

வைகாசி விசாகம்: இந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் வாழ்க்கையே மாறுமாம்

கடகம் 

மன அமைதி கிடைக்கவும் உங்களுடைய பயம் விலகவும் முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து பால் பாயாசம் நெய்வேதியமாக படைத்து பழனி ஆண்டவரை நினைத்து வழிபாடு செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும்.

சிம்மம் 

வேலையில் உயர்வு மற்றும் வெற்றிகள் பெற சிம்ம ராசிக்காரர்கள் முருகப்பெருமானுக்கு சர்க்கரை பொங்கல் படைத்தும் செந்தாமரை மலர் சாற்றியும் 6 நெய் தீப விளக்கேற்றி சண்முக கவசம் பாராயணம் செய்தால் முன்னேற்றம் உண்டு.

கன்னி

உங்களுடைய கடன் தொல்லை விலக மற்றும் உடல் இருக்கக்கூடிய நோய் விலக முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம் பச்சை பயிறு சுண்டல் படைத்து வழிபாடு செய்து "ஓம் சரவணபவாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்தும் அதை எழுதி வழிபாடு செய்வதும் சிறந்த பலன்களை கொடுக்கும்.

துலாம் 

கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்பட சந்தனம் வாசனை பூக்கள் கற்கண்டு படைத்து வழிபாடு செய்யலாம். பிறகு முருகப்பெருமானை ராஜா அலங்காரத்தில் தரிசனம் செய்வதும், தெய்வயானையுடன் முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் குடும்பத்தில் ஒற்றுமை கொடுக்கும்.

விருச்சிகம்

வாழ்க்கையில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலக தேன், பேரிச்சம்பழம் சிவப்பு மலர்கள் ஆகியவற்றை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும். அதோடு, வேம்பு மற்றும்  இலுப்பை  எண்ணெய் கொண்டு முருகப் பெருமானுக்கு தீபம் ஏற்றுவது ஒரு சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும்.

எல்லாம் இழந்து நிற்கின்ற பொழுது இவரை பற்றிக் கொண்டால் நொடியில் காலம் மாறும்

எல்லாம் இழந்து நிற்கின்ற பொழுது இவரை பற்றிக் கொண்டால் நொடியில் காலம் மாறும்

தனுசு 

குழந்தை பாக்கியம் பெறவும், ஆன்மீகத்தில் நல்ல வளர்ச்சி அடையவும், மஞ்சள் நிற பழங்கள் கொண்டைக்கடலை ஆகியவற்றை முருகப்பெருமானுக்கு படைத்து முருகப்பெருமானின் 108 போற்றிகளை துதித்து வழிபாடு செய்யும்பொழுது தடைகள் யாவும் விலகும்.

மகரம்

வேலையில் நிலைத்தன்மை உண்டாக இளநீர், எள் பாயாசம் படைத்து வழிபாடு செய்வதும், நீல நிற பூக்களால் பூஜை செய்வதும் மலை கோயில்களுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்வதும் அங்கு ஆறு முறை முருகப்பெருமானை வலம் வந்து தரிசிப்பதும் வேண்டுதல் வைப்பதும் நல்ல பலன்களை கொடுக்கும்.

கும்பம் 

அமைதியாக தொழில் ரீதியாக நல்ல லாபத்தை பெறவும் புகழ் மற்றும் உயர்ந்த அந்தஸ்தை பெற வெல்லத்தை செய்யப்பட்ட பலகாரங்கள் கதம்ப மாலை அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம் அல்லது பஞ்சாமிர்தற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கலாம்.

மீனம் 

மனதில் உள்ள குழப்பங்கள் விலகவும், ஞானம் பெற கடன் அடைய சர்க்கரை பொங்கல் படைத்து கந்த குரு கவசம், திருமுருகாற்றுப்படை படைத்து வழிபாடு செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US