12 ராசிகளின் உண்மையான தன்மைகள்.. மறைக்கப்பட்ட ரகசியங்கள்

By Sakthi Raj May 21, 2026 09:03 AM GMT
Report

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தன்மைகள் இருக்கும். அந்த தன்மைகள் அவ்வப்போது வெளிப்படையாக வெளி வருவதை நான் காணலாம். அப்படியாக, 12 ராசிகளுக்குரிய உண்மையான தன்மைகள் என்ன மறைக்கப்பட்ட சில ஜோதிட ரகசியங்களை பற்றி பார்ப்போம்.

12 ராசிகளின் உண்மையான தன்மைகள்.. மறைக்கப்பட்ட ரகசியங்கள் | Secrets And Characterstics Of 12 Zodiac

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் வெளியே கோபம் கொள்பவர்கள் போல் தெரிந்தாலும் அவர்கள் குழந்தை மனம் கொண்டவர்கள். யாரையும் இவர்களால் நீண்ட நாட்களுக்கு வெறுக்க முடியாது. அதே போல் போட்டி என்று வந்துவிட்டால் இவர்கள் தூங்காமல் உழைத்து அதில் வெற்றி அடையக் கூடியவர்கள்.

ரிஷபம்:

இவர்கள் வெளியே பார்ப்பதற்கு அமைதியாக இருப்பவர்கள் போல் இருந்தாலும் உள்ளுக்குள் எல்லா விஷயத்தையும் பற்றி கணக்கு போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

பிடித்தவர்களுக்காக உயிரையே கொடுப்பவராகவும் இருக்கிறார்கள். அதைப்போல் இவர்கள் நம்பிக்கையை உடைத்து விட்டால் மீண்டும் இவர்களுடன் நட்பு பாராட்டுவது கடினம்.

மிதுனம்:

இவர்களுக்கு எப்பொழுதும் இரண்டு மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வெளியே சிரித்துக்கொண்டு வாழ்பவராகவும் உள்ளுக்குள் ஆயிரம் சிந்தனையை வைத்திருப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களுடைய பேச்சு எதிரியையும் நண்பனாக்க கூடிய அளவிற்கு வல்லமை கொண்டது. இவர்கள் எப்பொழுதும் இரண்டு தொழில் செய்து வாழக்கூடியவராக இருக்கிறார்கள். ரகசியத்தை அதிகம் விரும்புபவர்கள்.

கடகம்:

எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக கவனிக்க கூடியவர்கள். ஆனால் இவர்களுடைய கஷ்டத்தை வெளிப்படுத்த மாட்டார்கள் குடும்பம் தான் இவர்களுடைய பலம் மற்றும் பலவீனமாக இருக்கும்.

இவர்களுக்கு எப்பொழுதும் பழைய நினைவுகளை கைவிட முடியாது இவர்களுடைய மனம் பாதித்துவிட்டால் உடனடியாக அமைதியை இழந்து விடுவார்கள். இவர்களுக்கு தாயின் அருளும் பெண் தெய்வத்தின் அருளும் வாழ்க்கையை உயர்ந்த இடத்திற்குக்கூட்டி செல்லும்.

சிம்மம்:

ராஜ குணமும் ராஜ தந்திரமும் இயல்பாக இருக்கும். இவர்கள் மரியாதை இல்லாத இடத்தில் ஒருபொழுதும் நிற்க மாட்டார்கள். பிறருக்காக போராடக் கூடியவர்கள்.

இருப்பினும் புகழ் மற்றும் பணத்திற்கு ஆசைப்படுபவர்கள். அதிகமாக அன்பு உள்ளே வைத்திருந்தாலும் வெளியே இவர்கள் கோபம் கொள்பவராகவும் கண்டிப்பான தோற்றத்துடனும் காட்சி கொடுப்பவர்.

கன்னி:

எல்லா விஷயங்களையும் கலை நயத்துடன் அணுகக்கூடியவர்கள். வெளியே இவர்கள் சாதாரணமாக இருந்தாலும் உள்ளுக்குள் நிறைய பதற்றம் வைத்துக் கொள்பவர்கள். வாழ்க்கையில் எப்பொழுதும் சரியாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்.

இவர்களிடம் பொய் சொன்னால் அதை எளிதில் கண்டுபிடித்து விடுவார், மருத்துவம் மற்றும் கணக்கு துறையில் இவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

துலாம்:

எல்லா விஷயங்களிலும் நியாயத்துடன் செயல்பட நினைப்பவர்கள். இவர்களுக்கு தனியாக முடிவெடுக்க நிறைய சிரமங்கள் இருக்கும். அழகு, கலை மீது அதிக ஆர்வமும் ஈர்ப்பும் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் மன அமைதியை இழந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் பாதிப்படைந்து விடும். காதலில் ஆழம் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் ஆனால், அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்த மாட்டார்கள்.

காவல் தெய்வம் கருப்பசாமியின் சக்திவாய்ந்த 18 வடிவங்கள் என்ன தெரியுமா?

காவல் தெய்வம் கருப்பசாமியின் சக்திவாய்ந்த 18 வடிவங்கள் என்ன தெரியுமா?

விருச்சிகம்:

இவர்கள் எப்பொழுதும் ராசிகளில் மிகவும் மர்மமான ராசியாக இருக்கிறார்கள். இவர்கள் ஒருவரை நேசித்தால் முழுமையாக நேசிக்கிறார்கள்.

துரோகம் செய்ய மாட்டார்கள். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். அதே போல் ரகசியத்தை எப்பொழுதும் இவர்கள் ஒளித்து வைத்து கொண்டு இருப்பார்கள். வாழ்க்கையில் இவர்களுக்கு திடீர் என்று ஒரு மிகப்பெரிய மாற்றம் எப்பொழுதும் உண்டு.

தனுசு:

இவர்கள் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால், சுதந்திரத்தை கட்டாயம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். உண்மையை நேரடியாக அஞ்சாமல் பேசக்கூடியவர்கள்.

பயணம் மற்றும் ஆன்மிக தேடலில் இவர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. இவர்களை ஒரு இடத்தில் கட்டுப்படுத்தி வாழவைக்க வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமில்லாத ஒன்றாகவே மாறுகிறது.

மகரம்:

இவர்கள் எதையும் மெதுவாக செய்யக்கூடியவர்கள். ஆனால் உறுதியாக செயல்படுவார்கள். சிறுவயதிலிருந்து இவர்களுக்கு பொறுப்புகள் அதிகம்.

உணர்ச்சிகளை அவ்வளவு எளிதாக வெளிப்படுத்த மாட்டார்கள். வாழ்க்கையில் இரண்டாம் பகுதியில் இவர்கள் பெரிய இடத்திற்கு சென்று விடுவார்கள். சனிபகவானின் அருளால் தாமதம் இருந்தாலும் வெற்றி கட்டாயமாக உண்டு.

கும்பம்:

இவர்களுடைய சிந்தனை மிகவும் புதுமையாக இருக்கும். நண்பர்களுக்காக உயிரையும் கொடுப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் நடக்கும். திடீர் என்று நண்பர்களால் மிகப்பெரிய உயரத்தை தொடுவார்கள்.

அதே போல் ஆன்மீகத்திலும் அறிவியலிலும் இவர்களுக்கு அதிக ஆர்வம் உண்டாகும். எதையும் நேர்மறையாக அணுகக் கூடிய தன்மை கொண்டிருப்பார்கள்.

மீனம்:

மிகவும் ஆழமான உணர்ச்சி கொண்டவராக இருக்கிறார்கள். பிறருடைய கஷ்டத்தை இவர்கள் கஷ்டம் போல் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். அதேபோல் கனவு உலகத்தில் அதிகம் மிதப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆன்மீகத்தில் ஈர்ப்பு அதிகம் இருக்கும். கலை இசை பக்தி மூலம் இவர்கள் உயர்வை அடைகிறார்கள். பலருக்கும் தெரியாமல் உள்ளுணர்வு சக்தி இவர்களுக்கு அதிகம் செயல்படும்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US