திருப்பதி பற்றி நீங்கள் அறியாத சில ரகசியங்கள்
இந்தியாவில் தமிழர்களின் பெறுமை காக்கும் கோயில்கள் பல உள்ளன. அதில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஒன்று.
திருமலை ஏழுமலையான் கோவில் இந்தியா மட்டுமல்ல உலகளவிய ரீதியில் மர்மமான கோவிலாக பார்க்கப்படுகின்றது. இந்த கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
புராணங்களின்படி, ,இந்த கோயில், திருமலை ஏழுமலையான் சதி தேவி பத்மாவதியுடன் வீட்டிருக்கிறார். வெங்கடேசப் பெருமானை பலமாக வேண்டிக் கொண்டால் பல வேண்டுதல்கள் நிறைவேறும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட திருமலை தேவஸ்தானத்தில் நாம் அறியாத பல ரகசியங்கள் உள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
திருப்பதி பற்றிய ரகசியங்கள்
1. வெங்கடேசப் பெருமானின் திருவுருவச் சிலையைப் பார்க்கும் போது மனிதனை பார்ப்பது போல் இருக்கும்.
2. கோயிலுக்கு அடியில் விரஜன நதி ஓடுகிறது என பல கட்டுரைகளில் எழுதப்பட்டுள்ளது. ஸ்வாமி சிலையின் காதுக்கு அருகில் காதை வைத்து கேட்டால் இந்த ஆறு ஓடும் சத்தம் கேட்கும்.
3. கலியுகத்தில் வெங்கடேஸ்வர ஸ்வாமி ஒரு செல்வக் கடவுளாக போற்றப்படுகிறார். இதனால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
4. கோயிலுக்கும் வரும் காணிக்கைகளை உண்டியல் இருந்து எடுத்து எண்ணுவதற்காக தினமும் 20 பேர் வரை வேலை செய்கிறார்கள். இதன்படி, ஒரு நாளில் லட்சக்கணக்கான பணம் கோயிலுக்கு கொடையாக வருகின்றது.
5. குறித்த ஊரில் இருக்கும் மக்கள் கண்டிப்பானவர்களாக இருப்பார்கள். கருவறையில் முன்னால் விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். மாறாக என்ன பிரச்சினை வந்தாலும் ஜொலித்துக் கொண்டே இருப்பார்கள்.
6. ஸ்ரீவாரி சிலைக்கு தொடர்ந்து பச்சை கற்பூரம் பூசப்பட்டு வருகிறது. ஆனாலும் சிலைக்கு இதுவரையில் எந்தவிதமான சேதாரங்களும் வருவதில்லை.
7. பக்தர்கள் விமானம் மூலம் ஐரோப்பா - ஆம்ஸ்டர்டாமில் என்ற இடத்திலிருந்து பதப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் கொள்வனவு செய்து அனுப்புகிறார்கள். ஒரு ரோஜா மலரின் விலை இந்திய ரூபாயிக்கு சுமார் ரூ. 80 க்கு வரும்.
8. தினமும் ஏழுமலையானுக்கு ஒரு புதிய மண்சட்டி வாங்கி தயிர் மற்றும் நைவேத்தியங்கள் வைத்து படைக்கிறார்கள். இவை கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது.
9. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் இப்படி எதுவாக இருந்தாலும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. சுவாமிக்கு படைக்கின்ற நைவேத்தியம் மற்றும் மண்சட்டி தயிர்சாதம் பக்தருக்கு கிடைப்பது வரமாக அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |