கனவில் அடிக்கடி நாய் வந்தால் அசுபமா? அதிர்ஷ்டமா? உண்மை காரணம் இதோ
நீங்கள் தூங்கும் போது உங்களுக்கு நாய்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கனவுகள்
பொதுவாக கனவு வருவது ஒவ்வொருவருக்கும் இயல்பான ஒன்றே... நாம் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது கனவுகள் வருகின்றது.
இந்த கனவுகள் எதிர்கால நிகழ்வுகளை நோக்கி நம்மைச் சுட்டிக்காட்டுகின்றது என்று கூறப்படுகின்றது. சில கனவுகள் நம்மை சிந்திக்க வைத்தாலும், சில கனவுகள் பயங்கரமானதாக இருக்கும்.
ஆழ்மனதின் வெளிப்பாடுகள் இவ்வாறு கனவுகளாக வந்து வெளிப்படுவதாக விஞ்ஞானிகள் கூறினாலும், நாம் காணும் கனவுகள் வாழ்க்கையுடன் தொடர்புடையது என்று சாஸ்திரங்களும் கூறுகின்றது.
நமக்கு நடக்கவிருக்கும் நல்லது மற்றும் கெட்ட நிகழ்வுகளின் அறிகுறியாகவும் கனவுகள் கருதப்படுகின்றது. அதிலும் கனவில் வரும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.
வீட்டில் நன்றியுள்ள செல்லப்பிராணியாக கருதப்படும் நாய்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.
நாய்கள் கனவில் வந்தால்
உங்களது செல்லப்பிராணியாக வளரும் நாய் கனவில் வந்தால், ஆன்மீகத்தில் உங்களது பிணைப்பு இன்னும் உறுதியாகின்றது என்று அர்த்தமாம்.
நாம் செல்லமாக வளர்க்கும் இறந்துவிட்டது போன்று கனவில் வந்தால், இது தெளிவான கனவு என்று கூறப்படுகின்றது. நமது அதிகப்படியான பாசத்தையும், அதன் மீது வைத்த அன்பு, அர்ப்பணிப்பு இவற்றினை காட்டுகின்றது.
நாய் கடிப்பது போன்று கனவு ஏற்பட்டால், இது உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தினை முன்கூட்டியே உங்களது ஆழ்மனது எச்சரிப்பதாக அர்த்தம். மேலும் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும் என்பது அர்த்தம். அனைவருடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை காட்டுகின்றது.
இதுவே கருப்பு நயை கனவில் கண்டால், ஏதோ ஒரு விடயத்தை நினைத்து பெரிதாக பயம் மற்றும் கவலை உள்ளதாக அர்த்தம். மேலும் ரகசியம் ஒன்றினை வெளியே கூற முடியாமல் தவிக்கின்றீர்கள் என்றும் அர்த்தம்.
வெள்ளை நிற நாய் கனவில் வந்தால் அவை பாதுகாப்பு மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் அடையாளம். ஏனெனில் வெள்ளை நிறமானது தேவதைகள், தெய்வீக சக்தி, ஞானம் இவற்றினை குறிப்பதாகவும். இந்த கனவிற்கு ஒரு தேவதை அல்லது தெய்வீக சக்தி உங்களை கண்காணிப்பதாக அர்த்தம்.
ஆனால் நாய்கள் துரத்துவது போன்று கனவு வந்தால் ஒரு பயம் மற்றும் கவலை உங்களை துரத்துவதாகவும், நீங்கள் நிம்மதி இல்லாமல் இருப்பதையும் காட்டுகின்றது. அப்படி இல்லையெனில் உங்களது வாழ்க்கை அல்லது எதிர்காலத்தைகு் குறித்தும் கவலை, உங்களை துரத்தும் பிரச்சினையிலிருந்து தப்பிக்க நினைப்பதாக அர்த்தமாம்.