இலங்கை- நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய மண்டலாபிஷேக திருக்கல்யாணம்

By DHUSHI Jul 07, 2024 07:40 AM GMT
Report

 நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சோழரின் மனைவியால் கட்டப்பட்ட சிவன் கோயில்

சோழரின் மனைவியால் கட்டப்பட்ட சிவன் கோயில்

இலங்கை - நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தின் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி சீதையம்மன சமேத ஸ்ரீ இலட்சுமணன் ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட விசேட ஊர்தியில் ஊர்வலம் நேற்று (6) இடம்பெற்றது.

இந்த விசேட ஊர்தி காலை 8.00 மணிக்கு நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு உடபுஸ்சல்லாவ வீதி வழியாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம், தர்மபால சுற்றுவட்டம், நுவரெலியா பிரதான தபால் நிலையம், கண்டி வீதி ஜனாதிபதி மாளிகை ஊடாக கண்டி வீதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்றது.

இலங்கை- நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய மண்டலாபிஷேக திருக்கல்யாணம் | Seetha Eliya Seethai Amman Temple Abishegam

அங்கு விசேட பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டன.

1008 சங்காபிஷேக பூஜை

முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடத்தி வைத்த சிவ பெருமான்

முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடத்தி வைத்த சிவ பெருமான்

இதனை தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் நுவரெலியா புதிய கடை வீதி, பிரதான வீதி, பதுளை வீதி வழியாக மாகாஸ்தோட்ட கட்டுமானை ஊடாக சீத்தாஎலிய எஸ்போட் வீரந்தகத்தின் முன்பு ஆரம்பமாகிய பால்குட பவனியுடன் ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இலங்கை- நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய மண்டலாபிஷேக திருக்கல்யாணம் | Seetha Eliya Seethai Amman Temple Abishegam

பின்னர் 1008 சங்காபிஷேக பூஜை ஏராளமான அடியார்களின் பங்கேற்றார்கள்.

மதியம் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதே சமயம், இன்றைய தினம் காலை 8.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி தொடர்ந்து இராமர் சீதா திருக்கல்யாணமும் பட்டாபிஷேகம் இடம்பெறும்.

இலங்கை- நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய மண்டலாபிஷேக திருக்கல்யாணம் | Seetha Eliya Seethai Amman Temple Abishegam

இன்றைய தினமும் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. அத்துடன் சீதா பிராட்டியின் அருளை பெற்று சுகவாழ்வு வாழ ஆசிகூறி வருக வருக என ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

           

GalleryGalleryGallery
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US