முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடத்தி வைத்த சிவ பெருமான்
தமிழ்நாடு ஒரு ஆன்மீக பூமி என்று சொல்லலாம்.அப்படியாக சைவம் வைணவம் என்று பின்பற்றுபவர்கள் உண்டு.சிவன், பெருமாளுக்கு எங்கும் கோயில்கள் அதிகம்.
சைவத்தை பின்பற்றுபவர்கள் சிவபெருமானை சரண் அடைந்து மனதார தனது வேண்டுதல்களை வைப்பார்கள்.
சிவன் கோயில்கள் ஒவ்வொரு கோயில்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு அற்புத வரலாறு இருக்கும்.அதிலும் மிக சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்றுதான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில்.
அந்த கோயிலின் சிறப்பையும் வரலாற்றையும் பற்றி பார்ப்போம். முன்னதாக சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் இடையே கடும் போட்டி நிலவி கொண்டு இருந்தது. நாட்டுக்காக பல போர்களை செய்து எதிரிகளாக வாழ்ந்து வந்தனர்.
இருந்தாலும் என்னதான் மிக பெரிய சண்டை போட்டு கொண்டாலும் இருவருமே சிவபெருமானை தங்களுடைய குல தெய்வமாகவே போற்றி வணங்கினர். எவ்வளவு பெரிய சண்டை சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடந்து கொண்டு இருந்தாலும் இருவரும் சிவபெருமானுக்கு ஆலயம் கட்டுவதை மற்றும் நிறுத்தவில்லை.
அவர்கள் இருவரும் கட்டிய எத்தனையோ சிவபெருமான் கோயில்கள் இன்று வரை காலத்தால் அளிக்க முடியாத அளவிற்கு கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது.
குறிப்பாக மிகவும் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தொடங்கி வரலாற்றின் சரித்திர குறியீடாக விளங்கக்கூடிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் என பல கோயில்கள் கலையம்சம் நம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்து கொடுத்து கொண்டு இருக்கிறது.
அந்த வரிசையில் மிகவும் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில் இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் தடுத்தாலீஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார்.
தாயார் காமாட்சியம்மனாக காட்சி கொடுத்து வருகிறார். தல விருச்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தளத்தில் வீற்றிருக்கக்கூடிய காமாட்சி அம்மனின் கழுத்தில் தாலி இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ளது.
அது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு வைத்து காமாட்சி அம்மனை 48 நாட்கள் வழிபட்டால் திருமண தடை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அவ்வாறு திருமணத்தடை நீங்கியவர்கள் அம்மனுக்கு மாங்கல்யம் சாற்றி தங்களது உணர்த்தக் கடனை செலுத்துகின்றனர்.
இங்கு இன்னொரு விஷேசம் என்னவென்றால் வள்ளியை முருக பெருமான் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இங்கு இருக்கக்கூடிய முருகப்பெருமான் கல்யாணசுப்பிரமணியராக காட்சி கொடுத்து வருகிறார். முருகப்பெருமானின் மனைவியான வள்ளி திருமணம் செய்வதற்கு முன்பு இந்த கோயிலில் வழிபாடு செய்து இருக்கிறார்கள்.
முருகப்பெருமானை திருமணம் செய்ய காத்திருந்து தவம் செய்து இருக்கிறார் வள்ளி,இருப்பினும் முருகப்பெருமான் வராத காரணத்தினால் உயிர் தியாகம் செய்ய முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
இதனால் ஒரு அக்னி குண்டத்தை உருவாக்கி தனது உயிரை தியாகம் செய்வதற்காக வள்ளி அம்மபாள் முயற்சி செய்ய,உடனே அவரை சிவபெருமான் தடுத்து முருகப் பெருமானை அழைத்து வள்ளியோடு திருமணம் செய்து வைத்துள்ளார்.
உயிர் தியாகம் செய்ய சென்ற வள்ளியை சிவபெருமான் நிறுத்திய காரணத்தினால் இங்கு வீழ்ச்சி இருக்கக்கூடிய இறைவனுக்கு தடுத்தாலீஸ்வரர் என்ற திருநாமம் கிடைத்துள்ளது.
இந்த கோயில் வழியாக திருத்தணிக்கு செல்வதற்கு பாதையும் உள்ளது என கூறப்படுகிறது
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |