செல்வம் கடாட்சம் அருளும் திருஞானசம்பந்தர் பாடல்
‘செல்வம்’ என்ற சொல் ஏழு முறை வரும்படி திருஞானசம்பந்தர் அருளிய பாடல் இது. அனுதினமும் இப்பாடலைப் பாடி, சிவனாரை வழிபட்டு வந்தால் பொன் – பொருள் மட்டுமின்றி சகல செல்வங்களும் கிடைக்கும்.
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்
ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே!
பொருள்
செல்வவளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச்செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம். சிற்றம்பலத்தெழுந்தருளியிருக்கின்ற செல்வன் கழலை ஏத்தும் இன்பமே இன்பம் என்கின்றது இப்பாடல்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |