வாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்த பொருட்கள்
நமக்கு எப்படி ஓவ்வொரு பொருள் பிடித்தமான பொருள் இருக்கிறதே அதே போல் தெய்வங்களுக்கும் ஒவ்வொரு பொருள் பிடித்தமான பொருட்கள் இருக்கிறது.அதை நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்யவேண்டும்.
இல்லை என்றால் அந்த தெய்வங்களுக்கு மிகவும் பிடித்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து ஸ்வாமியின் மனதை குளிர வைக்கவேண்டும்.
இதை செய்வதனால் நம் மீது ஏதேனும் தவறாக செய்த குற்றம் பாவம் இருந்தால் இறைவன் மன்னித்து அருள் புரிவர் என்பது நம்பிக்கை.
இது எல்லா தெய்வங்களுக்கு பொருந்தும்.அப்படியாக எதிரிகள் தொல்லையில் இருந்து காக்க வாராஹி அம்மன் வழிபாடு பற்றி கேள்வி பட்டு இருப்போம்.
அந்த அம்மனை வழிபாட வாழ்க்கையில் எல்லா விதமான செல்வ வளங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.அப்படியாக வாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்த பொருட்களை பற்றி பார்ப்போம்.
வாராஹி அம்மனுக்கு உகந்த திதியாக திகழ்வது பஞ்சமி திதி. இந்த பஞ்சமி திதி வரும் நாட்களில் அம்மனை வழிபாட சிறந்த பலன்கள் கிடைக்கிறது.
வாராஹி அம்மனுக்கு பிடித்தமான பொருட்களில் கிழங்கு வகை முதல் இடத்தில் இருக்கிறது.எந்த கிழங்காக இருந்தாலும் அம்மனுக்கு படைத்து நெய்வேத்தியம் செய்ய அம்மன் மனம் குளிர்கிறது.பிறகு வாராஹி அம்மனுக்கு கனிகள் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.
அதிலும் மாதுளம்பழத்தை வைத்து வழிபட இன்னும் சிறப்பானதாக அமைந்து இருக்கிறது.வாராஹி அம்மனுக்கு வஸ்திரம் என்று எடுத்துக்கொண்டால் தங்க நிறத்தில் உள்ள வஸ்திரத்தை சாற்றுவது மிகுந்த சிறப்பை தருகிறது.
அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு சிவப்பு நிற புடவையும் மிகவும் பிடித்த நிறமான புடவையாக இருக்கிறது. மேற்கொண்ட வழிபாடு எல்லாம் மிக எளிமையான வழிபாட்டு முறை தான்.
எப்படி அம்மன் நம் வேண்டுதலுக்கு ஏற்ப நம் மனதை குளிர வைக்கிறார்களோ நாமும் அம்மனுக்கு பிடித்த பொருட்கள் செய்து அம்மனை மனதார பிராத்தனை செய்து மனம் குளிர வைக்கவேண்டும்.
அப்படி முழு இறைவழிபாட்டோடு செய்கையில் நம் குடும்பத்தை காத்து அருள்புரிவாள் அம்பாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |