இன்றைய ராசி பலன்(20-09-2025)

Report

மேஷம்:

இன்று உங்களுடைய தேவைகள் அனைத்தையும் சரி செய்து கொள்வீர்கள். சிந்தனைகளில் சில குழப்பங்கள் தோன்றினாலும் மாலை மேல் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷபம்:

இன்று உங்கள் பேச்சுகளில் பக்குவம் உண்டாகும். யாரை பார்க்கக்கூடாது என்று நினைத்தீர்களோ அவர்களை சந்திக்கும் நிலை உண்டாகும். மனதில் பக்தி அதிகரிக்கும்.

மிதுனம்:

இன்று ஒரு சிலருக்கு அரசு வழிகளில் சில வேலைகள் அதிகரிக்கும். உங்களுக்கு ஏற்பட்ட மறைமுகமான எதிரிகளையும் தடைகளை தாண்டி வெற்றி காண்பீர்கள். நட்புகள் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.

கடகம்:

இன்று உங்களுக்கு ஒரு முக்கிய நபரின் அறிமுகம் ஏற்படும். பேச்சுக்களால் ஆதாயம் பெறுவீர்கள். பழைய சிக்கல்கள் ஒன்றை குறித்து ஆலோசனை செய்வீர்கள். வங்கி பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

சிம்மம்:

ஆரோக்கியத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அரசு சார்ந்த விஷயங்களால் உங்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். பொறுமையாக இருப்பதால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும்.

2 முறை தனது இடத்தை மாற்றும் புதன் பகவான்- இந்த 2 ராசிகளுக்கு தங்கம் குவிய போகிறதாம்

2 முறை தனது இடத்தை மாற்றும் புதன் பகவான்- இந்த 2 ராசிகளுக்கு தங்கம் குவிய போகிறதாம்

கன்னி:

இன்று நீங்கள் கடன் வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிலர் சமுதாய பணிகளில் ஈடுபடுவார்கள். உயர் அதிகாரிகளின் துணையால் முக்கிய வேலையை முடிப்பீர்கள்.

துலாம்:

எதையும் சமாளித்து வெற்றி காணும் திறன் உண்டாகும். பெற்றோர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையானவர்களின் ஆலோசனை உங்களுக்கு நன்மை உண்டு செய்யும்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சில கவலைகள் உண்டாகலாம். கணவனைப் பற்றிய பெருமை அடைவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.

தனுசு:

மனதில் ஒருவிதமான தேடல்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் உங்களுடைய முழு கவனத்தை செலுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சில செலவுகளை சமாளித்து கொள்வது நல்லது.

மகரம்:

அவசரமாக செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். காலை முதல் மனம் சற்று எரிச்சலாக காணப்படலாம். பேச்சுக்களில் மிகவும் கவனமாக இருப்பதால் மட்டுமே பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

கும்பம்:

மனதில் நிலையான முடிவை எடுக்கும் தைரியம் பிறக்கும். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகி நன்மைகள் உண்டாகும்.

மீனம்:

இன்று உங்கள் மனதளவில் சந்தித்து வந்து சங்கடங்கள் அனைத்தும் விலகும். பிள்ளைகளை பற்றி பெருமை அடைவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US