செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் இந்த இடத்தில் மட்டும் கட்டாயம் இருக்கக் கூடாதாம்

By Sakthi Raj Oct 14, 2025 10:20 AM GMT
Report

   ஜோதிடத்தில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் ஒருவருடைய வீரம் மற்றும் ஒரு விஷயத்தை துணிச்சலாக செய்யக்கூடிய காரியத்தை குறிப்பவராக இருக்கிறார். மேலும் பெண்களாக இருந்தால் செவ்வாய் பகவான் அவருடைய கணவன் மற்றும் சகோதரனை குறிக்கக்கூடிய காரணியாக இருக்கிறார்.

ஆண்கள் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் அவர்களுடைய தொழில் கூட்டாளிகளை குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார். அந்த வகையில் செவ்வாய் பகவான் ஒருவர் ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் வீடும், அந்த வீட்டில் அவர் கொடுக்கக்கூடிய நன்மை தீமைகளை பற்றி பார்ப்போம்.

தீபாவளி கொண்டாடும் முன் இந்த 7 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

தீபாவளி கொண்டாடும் முன் இந்த 7 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

1ஆம் வீடு:

லக்னத்தில் செவ்வாய் இருந்தால் அந்த நபர் எதையும் துணிச்சலாக செய்து விடுவார். ஆனால் மிகவும் கோபம் கொண்ட நபராக இருப்பார்  

2ஆம் வீடு:

இரண்டாம் வீட்டில் செவ்வாய் பகவான் இருக்கும் பொழுது அந்த நபர் மிகவும் உறுதியான நபராக இருப்பார். ஆனால் பிறரிடம் சற்று கடினமாக நடந்து கொள்வார்.

3ஆம் வீடு:

மூன்றாம் வீட்டு செவ்வாய் பகவான் இருக்கும் பொழுது அவர் மிகவும் வீரமானவராக இருப்பார். ஆனால் எதிலும் அவசரமாக செயல்பட்டு சில பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்வார்.

4ஆம் வீடு:

நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் இருக்கும் பொழுது அவர் சுற்றியுள்ளவரை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார். ஆனால் மனநிலையில் அமைதியற்றவராக இருப்பார்.

5ஆம் வீடு:

ஐந்தாம் வீட்டில் செவ்வாய் பகவான் இருக்கும் பொழுது நல்ல குணம் கொண்டவராக இருப்பார். ஆனால் பிறரை ஆளும் பணப்பை கொண்டிருப்பார்.

6ஆம் வீடு:

ஆறாம் வீட்டில் செவ்வாய் பகவான் இருக்கும் பொழுது எதிலும் வெற்றி பெறக்கூடிய நபராக இருப்பார். ஆனால் அதிகம் சண்டை போடும் நபராகவும் இருப்பார்.

7ஆம் வீடு:

மிகவும் கவர்ச்சியாளராக இருப்பார். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக இருப்பார்.

8ஆம் வீடு:

எட்டாம் வீட்டில் செவ்வாய் இருக்கும் பொழுது இவர்களுக்கு பயம் என்பதே இருக்காது. ஆனால் நிறைய அழிவை உருவாக்க கூடியவர்.

9ஆம் வீடு:

எதையும் துணிந்து செய்யக்கூடிய தன்மை இருக்கும். ஆனால் போராட்டம் குணம் அதிகம் காணப்படும்.

10ஆம் வீடு:

எதையும் போராடி வெல்லக்கூடிய தன்மை பெற்று இருப்பார்கள். ஆனால் இரக்கமற்ற குணம் இருக்கும்.

11ஆம் வீடு:

உயர்ந்த குறிக்கோளை கொண்டு இருப்பார். ஆனால் மிகவும் சுயநலமாக செயல்படுவார்.

12ஆம் வீடு:

12ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டாகும். ஆனால் மனதிற்குள் போராட்டமாக இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US