வீட்டில் மறந்தும் இந்த திசையில் பீரோவை வைக்காதீர்கள்
நம்முடைய வீடுகளில் முக்கியமான துணிகள் மற்றும் பொருட்கள் வைக்க கட்டாயம் எல்லோர் வீட்டிலும் பீரோ இருக்கும்.அப்படியாக பலர் வீடு வசதிக்கு ஏற்ப பீரோவை வைத்திருப்பார்கள்.
ஆனால் பணம் மற்றும் நகைகள் வைக்கும் முக்கியமான அங்கமாக பீரோ இருப்பதால் வாஸ்து சாஸ்திர படி பீரோவை சில குறிப்பிட்ட திசையில் வைத்தால் பண தட்டுப்பாடு இல்லாமல் வீட்டில் செல்வ வளம் பெருகும்.நாம் இப்பொழுது வீட்டில் பணம் பெறுக பீரோவை எந்த திசையில் வைக்கலாம்?எந்த திசையில் வைக்க கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக நாம் இயல்பாகவே பீரோவை படுக்கை அறையில் தான் வைத்திருப்போம்.அப்படியாக வாஸ்துபடி, பீரோவை படுக்கையறையில் தென்மேற்கு திசையில் வைப்பது நல்ல பலன்களை தரும். இந்த திசையில் பீரோவை வைத்தால் பீரோ கதவினை வடக்கு அல்லது கிழக்கு திசையில் திறக்கலாம்.
இந்த திசை தான் செல்வத்தையும் செழிப்பையும் சிறப்பாக வழங்க கூடிய திசை என்று சொல்லப்படுகிறது. மேலும்,நம்முடைய வீட்டில் தென்மேற்கு மூலையில் பீரோவை வைப்பதால் வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்தும். வீட்டில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியம் சீராகும்.
பண நஷ்டம்,பண கஷ்டம் ஏற்படாமல் இருக்கும். படுக்கையறையில் பீரோ வைப்பதன் மூலம் வீட்டில் உழவர்களின் முன்னேற்றம் சிறப்பாக அமையும். வாஸ்து சாஸ்திர படி அறையின் வடக்கு திசையில் பணம், நகைகளை வைக்க சொல்கிறார்கள்.
ஏனென்றால் செல்வத்தின் அதிபதியான குபேரனின் ஆதார திசை வடக்கு.ஆகவே செல்வத்தை சேர்த்து வைப்பதற்கு இத்திசையே ஏற்றது. மேலும்,சிலர் பீரோவை சிலர் கண்ணாடியுடன் சேர்த்து வாங்குவார்கள்.அப்படி கண்ணாடி கொண்ட பீரோவை வாங்கி படுக்கை அறையில் வைத்தால் அவை படுக்கை அறைக்கு எதிராக இருக்க கூடாது.
ஏன் என்றால் சாஸ்திரத்தில் கண்ணாடி வைப்பதற்கு என்று தனி இடம் உண்டு.கண்ணாடி கொண்ட பீரோவை வாங்கும் பொழுது நிதி நிலைமையில் சில சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது. வீட்டின் மிக முக்கியமான பொருட்கள் எல்லாம் பீரோவில் தான் வைப்போம்.
அவை நம்முடைய சேமிப்பு பொருட்களில் மிக முக்கியமானதாக இருக்கிறது.அப்படியாக பீரோவை வடக்கு திசையில் வைக்கலாம் ஆனால் மறந்து கூட வடகிழக்கு திசையில் லாக்கர்களையோ பீரோவையோ வைக்க வேண்டாம். இதனால் நிதி இழப்புகள், பண பிரச்சனை வரலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |