தஞ்சை பெரிய கோயில் கட்டிய கல்லில் உருவான மற்றொரு சிறப்பு மிகுந்த ஆலயம்
சிவபெருமானை எவன் ஒருவர் மனதில் நினைக்கிறார்களோ அவர்களுக்கு முக்தி கிடைக்கும்.அப்படியாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிவபெருமான் ஆலயங்கள் எழுப்ப பட்டு இருக்கிறது.அதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கே பெருமை சேர்த்து கொடுக்கும் அளவில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவது தஞ்சை பெரிய கோயில்.
அந்த தஞ்சை பெரிய கோயில் கட்ட கல் எடுத்து செல்லும் பணியில் ஈடுபடும் பொழுது ஒரு கல் மட்டும் ஓர் இடத்தில் விழுந்தது.அதை மக்கள் இன்றளவும் கடவுளாக பாவித்து வழிபட்டு வருகின்றனர்.அந்த சிறப்பு வாய்ந்த கோயில் எங்கு இருக்கிறது என்று பார்ப்போம்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எரகுடி என்னும் ஊரில் தான் நாம் பார்க்க இருக்கும் கோயில் அமைய பெற்று இருக்கிறது.இங்கு இறைவன் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் வீற்றி இருக்கிறார்.
மேலும், இந்தக் கோவிலில் சூரியன், சந்திரன், காலபைரவர், வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் முருகப்பெருமான், சிவபெருமானின் அப்பு, வாயு, தேயு போன்ற தெய்வங்கள், காசி விஸ்வநாதர் கஜலட்சுமி அம்மாள், நிர்தி கணபதி, ஐயப்பன் சந்நிதி, வன்னி மர விநாயகர் ஆகிய கடவுள் சந்நிதிகளும் இங்கு உள்ளது.
இந்த கோயிலில் முக்கிய விஷேசம் என்னவென்றால் நமக்கு ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் விலக இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்.பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, திருவாதிரை, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், சங்கராஷ்டமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |