இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய செல்ல வேண்டிய சிவன் கோயில்
By Sakthi Raj
சிவன் என்றாலே நம்முடைய பாவங்களை கரைப்பவர்.அதாவது எவன் ஒருவன் சிவ பெருமானின் வழிபாட்டை தொடங்க ஆரம்பித்து விட்டானோ அவனுக்கு அன்றைய நாள் முதல் கர்ம வினைகள் படி படியாக குறைய தொடங்குகிறது என்று பொருள்.
மேலும் பலரும் உணர்த்திடாத ஒன்று நாம் சிவன் கோயில் சென்று சிவனை வழிபட்டு வந்தாலே நம்முடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகும்.அந்த வகையில் எந்த சிவன் கோயில் சென்றால் என்ன பலன் என்று பார்ப்போம்.
- திருகுடந்தை -ஊழ்வினை பாவம் விலக
- திருச்சிராப்பள்ளி -வினை அகல
- திருநள்ளாறு -கஷ்டங்கள் விலக
- திருவிடைமருதூர்- மனநோய் விலக
- திருவாவடுதுறை -ஞானம் பெற
- திருவாஞ்சியம் -தீரா துயர் நீங்க
- திருமறைக்காடு -கல்வி மேன்மை உண்டாக
- திருத்தில்லை- முக்தி வேண்ட
- திருநாவலூர் -மரண பயம் விலக
- திருவாரூர் -குல சாபம் விலக
- திருநாகை (நாகப்பட்டினம் ) -சர்ப்ப தோஷம் விலக
- திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) -முக்தி வேண்ட
- திருவண்ணாமலை- நினைத்த காரியம் நடக்க
- திருநெல்லிக்கா -முன்வினை விலக
- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் -மணவாழ்க்கை சிறப்புடைய
- திருகருக்காவூர்- கர்ப்ப சிதைவு தோஷம் விலக 1
- திரு வைத்தீஸ்வரன்- கோவில் நோய் விலக
- திருகோடிக்கரை -பிரம்ம தோஷம் விலக
- திருக்களம்பூர் -சுபிட்சம் ஏற்பட
- திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |