சிவன் பார்வதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த இடம்: எங்குள்ளது தெரியுமா?
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது.
இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தளமாகும்.
திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று கருதுகின்றனர்.
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சித்திரை மாத தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த திருவிழா, திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில், சிவபெருமான் திருக்கழுக்குன்றம் மலையில் வீற்றிருந்த போதுதான் பார்வதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார் என்று புராணங்களில் உள்ளன.
எனவே இத்தலம் திருமண வரம் அருளும் தலமாகவும் திகழ்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |