திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் அமைந்துள்ளது மிகவும் பிரபலமான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற பெருமை கொண்ட கோவில் என பல சிறப்புகளை இந்த ஆலயம் வைத்திருக்கிறது. இங்கு மூலவர் சுப்பிரமணியர் வள்ளியுடன் திருமண கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார்.
வள்ளி மலைக்கு சென்று வள்ளியை மனம் முடித்த முருகப்பெருமான் வள்ளியுடன் வந்து இங்கு குடி கொண்டதாக வரலாறுகள் நமக்கு சொல்கிறது. இவ்வாறு பல அற்புதங்களை இந்த கோயில் கொண்டு இருந்தாலும் இந்த கோவிலில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்றால் இங்க இருக்கக்கூடிய உத்தரவு பெட்டி தான்.
மனிதர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சி மற்றும் இக்கட்டான நிலையை முன்னதாகவே இந்த உத்தரவு பெட்டியின் வழியாக நாம் தெரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது. அதாவது இங்க இருக்கக்கூடிய சுவாமி பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட ஒரு சில பொருட்களை பெட்டியில் வைத்து பூஜை செய்யுமாறு முருகப்பெருமான் கூறுவார்.

பிறகு அந்த பொருட்களை பெட்டியில் வைப்பதற்கு சுவாமியிடம் உத்தரவு கேட்ட பிறகு, அந்த பொருட்களை பெட்டியில் வைப்பார்கள் . மேலும் வேறொரு பக்தர் கனவில் தோன்றி வேறு ஒரு பொருட்களை அந்த பெட்டியில் வைக்கும் வரை பழைய பொருட்கள்தான் பெட்டியில் இருந்து கொண்டிருக்கும்.
மேலும், இந்த கோவிலுக்கு நாம் நம் வாழ்க்கையில் என்ன தீர்வு வேண்டி செல்கின்றோமோ? அந்த தீர்வு மிக விரைவில் நடப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். அப்படியாக இந்த கோவிலில் இருக்கக்கூடிய உத்தரவு பெட்டி எவ்வளவு முக்கியமானது அதே அளவிற்கு பெரிய காளையும் முக்கியமானதாகும்.
இந்த கோவிலில் நடக்கக்கூடிய முக்கிய விசேஷ மற்றும் திருவிழாக்கள் போன்ற சடங்குகளில் பெரிய காளை பயன்படுத்துவது தொன்மையான மரபாகப் பின்பற்றி வரப்படுகிறது. இந்தக் காளையிடம் பக்தர்கள் வைக்கக்கூடிய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுவதாக பலர் சொல்கிறார்கள். இந்த காளையை தெய்வமாகவே போற்றி பக்தர்கள் பாவித்து வந்தார்கள்.
இந்நிலையில் இந்தக் காளை ஒரு சில நாட்களுக்கு முன்பு இரவு 11 மணி அளவில் முக்தி அடைந்ததாக சொல்கிறார்கள். அதோடு இந்த காளையின் உடலானது பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த காளையின் உடலை பார்த்து பல பக்தர்கள் பார்த்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அதோடு காளையின் இறுதி பூஜைகள் முடித்த பிறகு ஊத்துக்காடு தோட்டம் அருகே உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகே இந்த காளையானது நல்லடக்கம் செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.
மேலும் இந்த காளைக்கு ஒரு வருடத்திற்கு பின்பு கோவில் கட்டிங் சிவன்மலை ஆண்டவராக வழிபாடு செய்வதற்கும் காவடி குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள் . இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் அல்லாமல் பல முருக பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |