சிவனின் அன்சாவதாரமாக பூமிக்கு வந்தவர் யார் தெரியுமா? பலரும் அறியாத கதை
இன்றைய நவீன உலகில் கடவுள் என பலரால் அறியப்பட்ட ராம பக்தரான அனுமானுக்கு செவ்வாய்கிழமை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தினங்களில் அனுமனுக்கு பிடித்தால் போல் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் பக்தர்களின் வேண்டுதல்கள் அணைத்தும் நிறைவேறும்.
மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வளவு சிறப்பு கொண்ட அனுமன் பற்றிய யாமறியாத சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிவனின் அன்சாவதாரம்
இந்து மத நூல்களின் விஷ்ணு பகவான் பூமியில் இராமனாக அவதாரம் கொண்ட போது அவருக்கு துணையாக இருக்க பூமியில் சிவபெருமான் எடுத்த அவதாரம் தான் அனுமன்.
அனுமத் ராமாயணம்
ராமனின் தீவிர பக்தரான அனுமான் வால்மீகி ராமாயணம் எழுதும் முன்னரே “அனுமத் ராமாயணம்” என்ற கதையை இயற்றியிருந்தார்.
பின்னர், இராவணனை வென்று ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிய ராமர் அயோத்திக்குத் திரும்பிய நேரம் இமயமலைக்குச் சென்று சிவபெருமான் தவம் செய்தார். அப்போது பாறையின் மீது நகங்களால் ராமாயணத்தை எழுதினார் என புராணக்கதைகள் கூறுகின்றன.
3. பஞ்சமுகி அவதாரம்
ராமனையும் அவரது சகோதரரான லட்சுமணணையும் காப்பதற்காக அனுமன் பஞ்சமுகி அவதாரம் எடுத்ததாக கூறப்படுகின்றது. ராவணனை கொல்ல ஒரே நேரத்தில் ஐந்து விளக்குகளை அணைக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது 5 தலைகளை கொண்ட அவதாரம் எடுத்தார்.
அதில், தெற்கில் சிங்க வடிவில் நரசிம்மர், மேற்கில் கருடன், வடக்கில் பன்றியும் கலை மற்றும் வானத்தின் முன் குதிரை தலை இருந்தாக கூறப்படுகின்றது.
சூரிய நமஸ்காரத்தின் கண்டுபிடிப்பு
அனுமன் சூரியனிடம் அனைத்து வேதங்களையும் கற்ற பின்னர் சூரியனுக்கு குருதட்சனை கொடுக்க விரும்பினார். ஆனால் அதனை சூரியன் ஏற்க மறுத்து விட்டார்.
அப்போது அனுமன் அவரின் அசைவுகளால் வழிப்பட்டார் இதுவே சூரிய நமஸ்காரம் என சொல்லப்படுகின்றது இதனை இந்து மத நூல்கள் உணர்த்துக்கின்றன.