திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
தமிழ்நாட்டின் அமைந்துள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் தலம் ஒரு சிவன் கோயிலாகும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
இத்தலத்தின் மூலவர் திருவண்ணாமலையார் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இத்தலம், நினைத்தாலே முக்தி தரும் எனும் பெருமையைக் கொண்ட தலமாகவும் அறியப்படுகிறது.
இந்நிலையில், புரட்டாசி பிரதோசத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்திக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அரிசி மாவு, மஞ்சள் தூள், 500 லிட்டர் தயிர், 108 கிலோ விபூதி, 1500 லிட்டர் பால் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து மாலை அணிவித்து ஆராதனை நடைபெற்றது.
இச்சிறப்பு அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தஞ்சை பெருவுடையார் கோயிலில் நந்தியம் பெருமானுக்கு அரிசி மாவு, மஞ்சள், தேன் , தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







