தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?
தேங்காயை பொறுத்தவரை, ஆன்மீகத்தில் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், தேங்காய் உடைத்தால் நன்மை கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.
தேங்காயில் உள்ள 3 கண்களில், ஒரு கண் பிரம்மாவாகவும், 2வது கண் லட்சுமியாகவும், 3வது கண் சிவனாகவும் பார்க்கப்படுகிறது.
இதனால் தேங்காய்களை வைத்து பூஜிக்கும்போது, எந்த காரியமும் சுலபமாக முடியும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல், கடவுளுக்கு தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். தேங்காய் தீபம் என்பது பெண் தெய்வங்களுக்கு செய்யப்படும் ஒரு பரிகாரம் ஆகும்.
மேலும், தேங்காய் எண்ணெயை தேங்காயில் வைத்து ஏற்றினால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றினால் பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும் என்பார்கள்.
மேலும், தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யுமாம், கணவன், மனைவியிடையே இணக்கம் கூடும். பழையபாவம் நீங்குவதுடன், அனைவருக்கும் பிடித்தமானவராக கருதப்படுவீர்கள்.
குறிப்பாக தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றி வழிபட்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
அதேபோல தோஷம் நீங்க, பணத்தகராறுகள் நீங்க, வேலை கிடைக்க, குழந்தை இல்லாதவர்களின் குறைகள் தீருவதற்கு தேங்காய் தீபம் ஏற்றி பரிகாரம் செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |