ஆன்மீகம்: வீடுகளில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றலாமா?
ஆன்மீகம் என்பது இறை வழிபாடு என்பதை கடந்து நம்முடைய ஆன்மாவை மேன்மைப்படுத்த கூடியதாக இருக்கிறது. அப்படியாக இறை வழிபாட்டில் நாம் நிறைய விஷயங்களை கடைபிடிப்போம். அதில் ஒரு சிலருக்கு சில குழப்பங்கள் இருக்கும்.
அதாவது குறிப்பிட்ட சில தீபங்கள் வீடுகளில் ஏற்றலாம் என்றும் ஏற்றக்கூடாது என்றும் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதினால் பலருக்கும் ஆன்மிகம் தொடர்பான பல சந்தேகங்கள் இருந்து வருகிறது. அப்படியாக ஆன்மீகம் தொடர்பாக தெரிந்து கொள்ள விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

1.நம்முடைய இந்து மதத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், இந்த வழிபாட்டை நாம் கோவிலில் மட்டும் தான் செய்ய வேண்டும். வீடுகளில் செய்வதற்கு சாஸ்திர ரீதியாக நமக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
2. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் சனிபகவானுடைய தாக்கம் என்பது ஏதேனும் ஒரு கட்டத்தில் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. அதனால் சனிபகவானுடைய தாக்கம் குறைவதற்கு பலரும் கோவில்களில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இருப்பினும் வீடுகளில் நாம் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய கூடாது என்று சொல்லப்படுகிறது.

3. அதைப்போல் வீடுகளில் நமக்கு பிடித்த சுவாமி படங்களை வைத்து வழிபாடு செய்யலாம். ஆனால் அதில் குறிப்பாக சனீஸ்வரன், நடராஜர், காளிதேவி போன்ற உக்கர தெய்வங்களின் உருவப்படங்களை நம் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யக் கூடாது.
4. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாம் வீடுகளில் குத்துவிளக்கு தேய்க்க கூடாது. அதேபோல் வீடுகளில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஒட்டடை அடிப்பதும் தவிர்க்க வேண்டும்.
5. வீடுகளில் நாம் திருஷ்டி கழிப்பது உண்டு. அந்த வகையில் ஞாயிறு, செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் நாம் திருஷ்டி கழிப்பதற்கு உகந்த நாளாக இருக்கிறது. இந்த நாளில் திருஷ்டி கழிக்கும் போது நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மை கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |