இந்த விஷயங்களை எல்லாம் உங்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லையா? காரணம் இதோ
நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் நம் அறிவுக்கு எட்டியது நம் மனதிற்கு எட்டுவதில்லை நம் அறிவு ஏற்றுக் கொண்டதை நம் மனமானது ஏற்றுக்கொள்வதற்கு பல காலங்கள்எடுத்துக்கொள்ளும். இதற்கு பெயர் தான் பக்குவம் இல்லாமை.
அப்படியாக, நாம் குறிப்பிட்ட சில விஷயங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும் பொழுதும் அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பொழுது என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
உங்களை யாராவது திட்டும் பொழுது உங்களை அறியாமல் உங்களுக்கு அதிகம் கோபம் வருகின்ற பொழுது உங்களுடைய மனம் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதின் அர்த்தமாகும்.

தைரியமாக மற்றும் தன்னம்பிக்கையோடு இருக்கக்கூடிய மனமானது எந்த விஷயங்களையும் செயல்களையும் செய்வதற்கு முன்பாக பல முறை யோசிக்கும். தேவையில்லாத விஷயங்களை எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகயிலும் அவர்கள் செய்வதில்லை.
அதேபோல் நாம் இறைவனை வழிபாடு செய்கின்றோம் இறைவனுக்கு மரியாதை செலுத்துகின்றோம் என்றால் கட்டாயம் நம் மனமானது எந்த நிலையிலும் சஞ்சலம் அடையக் கூடாது. இறைவனே நம்பியவர்கள் இறைவன் எல்லாம் பார்த்துக் கொள்வான் எல்லாம் அவனுடைய செயல் என்று தீர்க்கமாக நம்பிக்கை கொள்ளும்.

ஆக, நீங்கள் இறைவனையும் பிரார்த்தனை செய்கிறீர்கள், அதேசமயம் வருகின்ற துன்பங்களை கண்டும் துவண்டு போகிறீர்கள் என்றால் உங்களுடைய பக்தியை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்.ஆக இந்த இரண்டு விஷயங்களும் ஒருவர் அவருடைய வாழ்க்கையில் சரியாக செய்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் துன்பம் என்கின்ற நிலை இல்லை.
அதாவது எந்த ஒரு மனிதனுடைய மனமானது அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறதோ அவன் இந்த உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றான் யாரும் அவனை வீழ்த்த முடியாத உயர்ந்த நிலைக்கு செல்கின்றான். அதேபோல் எல்லாம் இறைவன் செயல் என்று எதற்கும் மனம் சஞ்சலம் அடையாதவனை இந்த பிரபஞ்சம் நினைத்தாலும் அசைக்கமுடியாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |