கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் கெட்ட சகுணமா?
விஷேச நாட்களிலும், புதிதாக ஏதாவது தொழில் தொடங்கும் போதும் தேங்காய் உடைத்து ஆரம்பிப்பது வழக்கம்.
தேங்காய் அழுகல்
அந்த வகையில் கோவில்களில் உடைக்கும் தேங்காயில் தேங்காய் பூ இருந்தால், நல்ல சகுணமாக கருதப்படுகிறது. இது அதிகமான பணவரவு வரப்போவதை குறிக்கிறது. புதிய முயற்சி எடுக்க நினைப்பவர்கள் தைரியமாக எடுக்கலாம்.

வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பார்கள். தேங்காயின் கண் பகுதி பெரிதாக உடைந்தால், எதிரிகள் அழிந்துப் போவார்கள் என்று அர்த்தம். தேங்காய் சரிபாதியாக உடைந்தால், குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
அதுவே, நீள்வாக்கில் உடைந்தால், பிரச்சனை ஏற்படும். தேங்காய்க்குள்ளே நீர் இல்லாமல் இருந்தால், நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு அதிக முயற்சி தேவை என பொருள். தேங்காய் சிறுசிறு துண்டுகளாக உடைந்து ஓடினால் நம் துன்பங்களும் நம்மை விட்டு அகலும்.
குறிப்பாக தேங்காய் அழுகி போயிருந்தால் கெட்ட சகுணம் என்று சொல்வதுண்டு. ஆனால், இதன் மூலமாக நம்மிடம் இருக்கும் தீயசக்தி, பீடை, கண் திருஷ்டி நம்மை விட்டு அகன்று போகும் என்று அர்த்தம். இதனால் கவலைப்பட தேவையில்லை.
