மன்னராட்சி காலத்தில் உபதிஸ்ஸன் மன்னன் சென்று வழிபடுவதற்காக ஐந்து சிவத்தலங்கள் கட்டப்பட்டன. இவை இன்று “பஞ்சேஸ்வரங்கள்” என அழைக்கப்படுகின்றன.
இதன்படி, வடக்கு- நகுலேஸ்வரம், கிழக்கு - திருக்கோணேஸ்வரம், தெற்கு- தொண்டீஸ்வரம், மேற்கு- முன்னேஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வரம் போன்றவையாகும்.
இந்த சிவாலயங்கள் ஐந்தும் போர்த்துக்கேயர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் சிதைத்தழிக்கப்பட்டது.
மாறாக தொண்டீஸ்வரம் தவிர்ந்த ஏனைய நான்கு ஈஸ்வரங்களும் மீண்டும் தமது பண்டைய சிறப்புடன் இன்று துலங்குகின்றன.
பஞ்சேஸ்வரங்களில் தொண்டீஸ்வரத்தின் நிலை சற்று வேறுப்பட்டதாக இருக்கும்.
அந்த வகையில் தென் மாகாணத்தின் கட்டப்பட்ட தொண்டீஸ்வரம் ஆலயத்தின் வரலாற்றை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிதைக்கபட்ட கோயிலின் கதை
தொண்டீஸ்வரம் கோயிலானது இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகைக்கு முன்னர் இந்து மக்கள் வரலாற்று மிக்க கோயிலாக இந்த கோயில் பார்க்கப்பட்டது.
அந்நியரின் வருகையின் பின்னர் முதலாம் இராஜசிங்க மன்னனுக்கும், போர்த்துக்கேயருக்கும் இடையே நடந்த போரில் தொண்டீஸ்வரம் திருக்கோயில் சிதைத்து கொள்ளையிடப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
கடந்த கி.பி. 1587இல் இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து கோயிலிருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் “லிஸ்பன்” என்ற நகர தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது.
தென்னிலங்கை கரையில் மிக பழைமையான தொண்டீஸ்வரம் கோயில் இன்று சீரமைப்பு செய்யப்பட்டு பிரசித்தி பெற்ற விஷ்ணு கோயிலாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
இந்த விஷ்ணு கோயில் மாத்தறை நகரத்திலிருந்து இரண்டரை மைல் தொலைவில் மாத்தறை_ - ஹம்பாந்தோட்டை வீதியில் தெவிநுவர என்ற இடத்தில் அமைந்துள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |