வெற்றிகள் கிடைக்க ஸ்ரீ ராம ஜெயம் மாலை பரிகாரம்
ஸ்ரீ ராமர் வெற்றிக்கு அதிபதி. இவரை இடைவிடாது வழிபாடு செய்து எந்த ஒரு காரியம் செய்தாலும் நிச்சயம் அந்த காரியம் நல்ல முறையில் முடிந்து வெற்றியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும். அப்படியாக, நம் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களும், தீர்க்க முடியாத சிக்கல்களில் இருந்து வெளியே வர செய்ய வேண்டிய ஒரு முக்கியமான ஸ்ரீ ராமர் வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, நாம் நினைத்த காரியம் நடக்க ஸ்ரீ ராம ஜெயம் என்று 108 முறை எழுதுவோம். அவ்வாறு எழுதிய நோட்டுகளை நாம் ஸ்ரீ ராமர் கோயில் அல்லது ஹனுமன் ஆலயத்தில் சென்று கொடுத்து விடுவோம்.
அப்படியாக, நாம் ஏதேனும் முக்கியமான வாழ்க்கை தொடர்பான விஷயங்களுக்கு போராடி கொண்டு இருக்கும் வேளையில் 108 முறை ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதி அதை அருகில் இருக்கும் ஹனுமன் ஆலயத்தில் சென்று ஹனுமனுக்கு மாலையாக அணிவித்து மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், நாம் நினைத்த காரியம் அனைத்தயும் நிறைவேற்றி கொடுப்பார்.
மேலும், ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதி பிரார்த்தனை செய்யச் செய்ய, நம் பாவங்கள் நம்மை விட்டு விலகி புண்ணியம் சேருகிறது. ராமரின் தீவிரமான பக்தன் ஹனுமன். ஸ்ரீ ராமபிரான் இருக்கும் இடமெல்லாம் ஹனுமன் இருப்பார்.
ஹனுமன் அவரை ராம பக்தன் என்று அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைபவர். அதனால், செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் ‘ஸ்ரீராம ஜெயம்’ என்று 108 முறை எழுதி ராமபிரானையும் அனுமனையும் மனதாரப் பிரார்த்தனை செய்து ஹனுமனுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்வது சிறப்பாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |