வாழ்க்கையில் ஒரு முறையாவது கட்டாயம் செய்யவேண்டிய தரிசனம்
இறைவனின் தரிசனத்தில் பல முக்கிய தரிசனங்கள் இருக்கிறது.ஆனால் எல்லோரும் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் செய்யவேண்டிய தரிசனமாக இந்த விஸ்வரூப தரிசனம் உள்ளது.அதிலும் பெருமாளுக்கே உரிய மாதமான புரட்டாசி மாதத்தில் ஸ்ரீ ரங்க பெருமானை விஸ்வரூப தரிசனம் செய்ய வாழ்நாளில் பிறவி பயனை அடைந்த பலன் கிடைக்கிறது.
அப்படியாக முதலில் இந்த விஸ்வரூப தரிசனம் என்றால் என்ன என்று பார்ப்போம். விஸ்வரூப தரிசனம் என்றால் காலையில் நாம் இறைவனை முந்தைய நாள் அலங்காரத்தோடு செய்யும் தரிசனம் ஆகும்.அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு முதல் காட்சியாக பெருமாளை பார்த்து தொடங்குவது என்பது எத்தனை சிறப்பு வாய்ந்தது என்று நாம் புரிந்து கொள்ளமுடியும்.
அப்படியாக ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை முதல் நேர பூஜை மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இது ஸ்ரீரங்கத்து பெருமாளுக்கே உரிய ஒரு தனி வழிப்பாட்டு முறையாகும். ‘விஸ்வம்’ என்றால் ‘பெரிய’ என்றும் பொருள் . ‘ரூபம்’ என்றால் உருவம்.
இங்கு இருக்கும் பெருமாளுக்கே 'பெரிய பெருமாள் ' என்று தான் திருநாமம். பெரிய பெருமாள் காலை கண்விழித்து கொள்ளும் இந்த வேளைக்கு விஸ்வரூபம் என்று பெயர் அதாவது 108 திவ்யதேசங்களில் உள்ள அனைத்து பெருமாளும் , முதல் நாள் இரவு இங்கு வந்து அரங்கனிடத்து இருந்து ஒன்றாகி அடுத்த நாள் காலை அவரவர் தம் யதாஸ்தானத்திற்கு எழுந்தருளி விடுவார்கள் என்று ஐதீகம் உண்டு.
அப்படியாக அனைத்து திவ்யதேச எம்பெருமான்களும் ஒன்றாகி சேவை சாதிக்கும் இந்த நேரம் மிகப்பெரிய மகத்துவம் பொருந்திய சேவை. அதனால் தான் இந்த தரிசனம் ‘விஸ்வரூப தரிசனம்’.
ஆக வாழ்நாளில் ஒரு முறையாவது ஸ்ரீ ரங்கத்தில் இந்த விஸ்வரூப தரிசனம் செய்ய வாழ்க்கையில் உள்ள கர்மவினைகள் விலகி வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |