சுக்கிரனின் இடமாற்றத்தால் 61 நாட்களில் ராஜயோகம் பெரும் 3 ராசிகள் யார்?
ஜோதிடத்தில் ஒருவருடைய செல்வம், சொத்து, ஆடம்பர வாழ்க்கை மற்றும் புகழ் இவைகளுக்கு காரணமாக விளங்கக்கூடிய கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறார்.பொதுவாக சுக்கிர பகவான் யாரிடம் கருணை காட்டுகிறாரோ, அவர்கள் மிகக் குறுகிய காலத்தில் வாழ்க்கையில் உயர்ந்த பதவிகளை அடைவார்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசியின் அதிபதியாக கருதப்படுகிறார்.ஒரு மாதத்தில் சுக்கிரன் தனது ராசியை இரண்டு முதல் மூன்று முறை மாற்றுகிறார்.அப்படியாக வரும் ஏப்ரல் மாதம் சுக்கிர பகவான் தன்னுடைய ராசியை மாற்றவுள்ளார்.
அதாவது வருகின்ற ஏப்ரல் மாதம் 26-ம் தேதி மதியம் 12:02 மணிக்கு சுக்கிரன் தன்னுடைய ராசியை மாற்றுகிறார். சனிக்கிழமையன்று, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன் மே 16-ம் தேதி மதியம் 12:59 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பார்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அதிபராக கருதப்படுகிறார்.சுக்கிரனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர் பாராத ராஜயோகம் உண்டாகும்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் காத்திருக்கிறது.
துலாம்:
துலாம் ராசியின் அதிபதியாகவும் சுக்கிரன் திகழ்கிறார்.சுக்கிர பகவானின் இந்த ராசி மாற்றத்தால் துலாம் ராசியினர் செல்வ செழிப்பாக வாழ போகிறார்கள்.நீண்ட காலமாக முடிவிற்கு வராத பிரச்சனைகள் நல்ல முடிவு பெரும்.குடும்பத்தில் உங்கள் மேல் அதிக அன்பு செலுத்துவார்கள்.ஆன்மீக பயணம் மேற்கொள்ள திட்டம் தீட்டுவீர்கள்.
விருச்சிகம்:
சுக்கிர பகவான் விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவார்.கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும்.ஒரு சிலருக்கு உத்யோகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும்.இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |