சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெற போகும் மூன்று ராசிகள்
இந்த மாதம் நவம்பர் 7ஆம் தேதி அதிகாலை 3.21 மணிக்கு சுக்கிரன் தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். ஒரு மனிதனின் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான கிரகம்.
ஜாதகத்தில் சுக்கிரன் சாதகமான திசையில் இருந்தால் தான் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வசியம் மற்றும் அழகுக்கு பொறுப்பான கிரகம். இந்த பெயர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகத்தை கொட்டி தரப் போகிறது.
அப்படியாக ராஜ யோகம் பெற போகும் ராசிகள் பற்றி பார்ப்போம்.
மேஷம் ராசி
மேஷ ராசிக்கு 2 மற்றும் 7ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிர பகவான். இப்போது 9ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறது. இந்த பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும்.குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.வெளிநாடு மற்றும் வெளியூர் பயணம் சிறந்த யோகத்தை தரும்.காதல் சம்பந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.வேலையில் பதவி உயர்வு போன்ற சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கும்.
கன்னி ராசி
2 மற்றும் 9ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிர பகவான். இப்போது 4ஆவது வீட்டிற்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சமுதாயத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.அலுவலகத்தில் உங்களது செயல்பாடு நன்றாக இருக்கும்.பெற்றோர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.அண்ணன் தம்பி உதவிகளாக இருப்பார்கள்.
துலாம் ராசி
முதல் மற்றும் 8ஆவது வீட்டிற்கு அதிபதியான சுக்கிர பகவான் இப்போது 3ஆவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.நீங்கள் நாள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.தொழில் சம்பந்தமான வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.பணம் சம்பாதிப்பதில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள்.பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |