இடம் மாறும் சுக்கிரன்: அதிர்ஷ்டத்தில் நனைய போகும் ராசிகள்
வருகின்ற ஜூன் 7 முதல் சுக்கிரன் ரோகினி நட்சத்திரம் இருந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார்.இந்த இடம் மாற்றம் ஜூன் 18 வரைக்கும் இருக்கிறது.
இந்த சுக்கிரனின் இடம் மாற்றம் எல்லா ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறது.அதை பற்றி பார்ப்போம்.
மிதுன ராசி
சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் மிதுன ராசிக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது.தோலை தூர பயணம் நல்ல வாய்ப்புகளை தேடி தரும்.
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் காட்டிலும் நல்ல லாபம் கிடைக்கும்.சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
புதிய வருமானத்திற்கான முயற்சிகளை எடுப்பீர்கள்.புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்ப ராசி
சனிபகவானை அதிபதியாகக் கொண்ட உங்கள் ராசியில் சுக்கிர பகவானின் நட்சத்திர இடமாற்றம் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கன்னி ராசி
சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் கன்னி ராசிக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.நிதி நிலைமைகள் உயரும்.பணி புரியும் இடத்தில் வேலைக்கு ஏற்ற நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
நல்ல அதிர்ஷடமான நாளாக இருக்க போகிறது.எடுத்து கொண்ட காரியம் அனைத்திலும் வெற்றிகள் உண்டு.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் வருமான உயர்வு இருக்கிறது.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |