சுக்கிரனால் அதிஷ்டம் பெற போகும் ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jul 03, 2024 09:29 AM GMT
Report

 சுக்கிரன் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருப்பினும் ஒரு சில ராசிகள் சுக்கிரனின் உதயத்தால் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிரனால் அதிஷ்டம் பெற போகும் ராசிகள் யார் தெரியுமா? | Sukkkiran Bagavnal Athirshtam Pera Pogum Raasi

துலாம்ராசி

துலாம் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார்.இதனால் துலாம் ராசியில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரும்.சமுதாயத்தில் நல்ல மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக அது நிறைவேறும்.

மனதில் நினைத்த காரியம் அனைத்து நிறைவேறும்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மறந்தும் வீட்டில் இந்த பொருட்களை காலியாக வைக்க கூடாது

மறந்தும் வீட்டில் இந்த பொருட்களை காலியாக வைக்க கூடாது


கன்னி ராசி

கன்னி ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார்.அதனால் வாழ்க்கையில் கஷ்டம் மட்டும் பார்த்த உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.

நீங்கள் எடுக்க முடிவுகள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும்.தொழிலை விரிவு படுத்த அனைத்தும் சாதகமாக அமையும்.

ரிஷப ராசி

ரிஷப ராசியில் சுக்கிரனின் பயணம் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. நீண்ட நாள் மன கஷ்டங்கள் முடிவிற்கு வரும். நிதி வருமானம் அதிகம் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.குடும்பத்தில் நல்ல செய்தி தேடி வரும்.

பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US