சுக்ராதித்ய யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது
சுக்ராதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிகள் குறித்து பார்ப்போம்.
சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி. தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி சூரியன் குரு பகவானின் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழ்ந்து சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
எனவே சில ராசிகளின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும், தொழிலில் சிறப்பான வளர்ச்சியும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அவர்கள் யார்யார் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்
வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
தனுசு
புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
மீனம்
வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். செயல்திறன் பணியிடத்தில் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலை சிறக்கும்.