மீன ராசியில் உருவாகும் சுக்ராதித்ய யோகம்.. மார்ச் 15 முதல் குபேர யோகம் பெரும் ராசிகள்

By Sakthi Raj Mar 04, 2026 10:11 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் மாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகம் மாற்றம் தான் ஒரு தனி நபர் வாழ்க்கையில் மிகப்பெரிய ராஜயோகத்தையும் சரிவையும் ஒருவரின் கர்ம பலனுக்கு ஏற்ப கொடுக்கிறது.

அந்த வகையில் மார்ச் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மீன ராசிக்கு நுழைகிறார் அங்கே ஏற்கனவே சுக்கிரன் இருப்பதால் சூரியனும் சுக்கிரனும் இணைந்து சுக்ராதித்ய யோகம் உருவாக்கிறது.

மேலும் ஜோதிடத்தில் சூரிய பகவான் அதிகாரத்தையும் சுக்கிர பகவான் செல்வத்தையும் குறிக்க கூடியவர். இவர்கள் இருவரின் சேர்க்கையும் மிகப்பெரிய நற்பலன்களை கட்டாயம் உருவாக்கும். அதிலும் குறிப்பாக இந்த யோகம் மீன ராசியில் நடப்பதால் மிகச்சிறந்த பொற்காலம் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

மீன ராசியில் உருவாகும் சுக்ராதித்ய யோகம்.. மார்ச் 15 முதல் குபேர யோகம் பெரும் ராசிகள் | Sun Venus Conjuction Brings Luck To This Zodiac

நாளை மறுநாள் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் சனி பெயர்ச்சி விழா

நாளை மறுநாள் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் சனி பெயர்ச்சி விழா

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு இந்த யோகமானது இவர்களுக்கு நீண்ட நாள் கைகளுக்கு வராத பணத்தை கொண்டு வந்து சேர்க்கும். வருமானம் பல மடங்கு உயரக்கூடிய அற்புதமான காலகட்டம். புதிய தொழில் தொடங்குவதையும் முக்கியமான முதலீடுகள் செய்வதை பற்றியும் ஆலோசனை செய்வார்கள். அரசு வழியே நல்ல அணுகூலம் உண்டு.

மிதுனம்:

மிதுன ராசிக்கு இந்த யோகமானது தொழிலில் மிகப்பெரிய உயரத்தை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமுதாயத்தில் முக்கிய பங்கு பெறுவீர்கள். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாகும்.

இன்று ஆரம்பமாகும் சந்திர கிரகணம்... யாரை பாதிக்கும்? யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்று ஆரம்பமாகும் சந்திர கிரகணம்... யாரை பாதிக்கும்? யாருக்கு அதிர்ஷ்டம்?

கன்னி:

கன்னி ராசிக்கு இந்த யோகமானது திருமண வாழ்க்கையில் உள்ள குழப்பத்தை போக்க போகிறது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனக்கசப்புகள் நீங்கும். தொழில் ரீதியாக கூட்டாளிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல வளர்ச்சி அடைவீர்கள்.

மீனம்:

மீன ராசிக்கு இந்த யோகமானது அவர்கள் வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கப்போகிறது. குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மிகப்பெரிய அளவில் மரியாதை கொடுப்பார்கள். உங்களுடைய ஆளுமை திறன் வெளிப்படும். தடைபட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US